ETV Bharat / state

"டிடிவி தினகரன் இப்போது எடுத்த முடிவை முன்பே எடுத்திருந்தால் சசிகலா சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்" - கருணாஸ்! - KARUNAS MEETS TN CM MK STALIN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 2:02 PM IST

Updated : Mar 21, 2024, 2:44 PM IST

Karunas meets Tamil Nadu CM MK Stalin: டிடிவி தினகரன் இப்போது எடுத்த முடிவை 2017ல் எடுத்து இருந்தால் சசிகலா சிறைக்குச் சென்றிருக்க மாட்டார். என முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

karunas meets mk stalin
karunas meets mk stalin

சென்னை: முக்குலத்தோர் புலிப்படை சங்கம் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறது என அறிக்கை வெளியிட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை இன்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் “தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து சீர் மரபினர் சான்றிதழ் தொடர்பான எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தேன். வரக்கூடிய தேர்தலில் மதவாத சக்தியை, மதத்தை வைத்து மக்களைப் பிரிக்கும் பாஜகவை வீழ்த்த, இந்தியா கூட்டணியை ஆதரிப்பதோடு, எல்லா மக்களுக்குமான அரசு அமைய வேண்டும் என திமுக கூட்டணி போட்டியிடும்.

40 தொகுதியிலும் நான் உட்பட எங்கள் கட்சியினர் அனைவரும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். கடந்த 10 ஆண்டுக்கால அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவுள்ளோம்” என்றார். பின்னர், டி.டி.வி தினகரன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், மக்களை முட்டாள் என நினைப்பவர்கள் தான் முட்டாள். 2019ம் அண்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டி.டி.வி தினகரன் தற்போது பாஜக கூட்டணியில் ஒரு சீட்டு தான் எதிர்பார்த்தேன், இரண்டு சீட்டு கிடைத்தது என்பது வேதனை அளிப்பதாகும் என கூறினார்.

இதையும் படிங்க: வாடிக்கையாளரைப் போல் நைசாக பேசி.. சைசாக செல்போனை திருடிச் சென்ற நபர்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு - MOBILE PHONE THEFT IN VELLORE

இந்த முடிவை 2017ல் டி.டி.வி தினகரன் எடுத்திருந்தால் இன்று இந்நிலை உருவாகியிருக்காது. சசிகலா சிறைக்குச் சென்றிருக்கமாட்டார், எடப்பாடியும் வந்திருக்கமாட்டார்” என்றார். மேலும், ஒ.பி.எஸ் பொறுத்தவரை அவரவர் செய்த செயல் அவர்களுக்குத் திரும்ப நடக்கிறது என்றார்.

மேலும், ஆளுநர் பதவியினை ராஜினாமா செய்து விட்டு கட்சி பணியில் ஈடுபடுவது உலகில் வேறெங்கும் நடைபெறாது என தமிழிசை ராஜினாமா குறித்துப் பேசிய அவர், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான் நன்றி மறக்காதவன். ஆனால் வியாபாரி எடப்பாடியால் உருவாகிய நிலையை அனைவரும் அறிவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் முக்குலத்தோர் இப்போது அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் இதற்கு எடப்பாடி தான் காரணம் என்றார்.

முன்னதாக, சமூக நீதிக்காக 2024 நாடாளுமன்றத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தி.மு.க.வை ஆதரிக்கிறது எனவும் 5 முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் சே.கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்? அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதன் பின்னணி இதுதான்! - Rajya Sabha Allotment For DMDK

Last Updated :Mar 21, 2024, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.