ETV Bharat / state

தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக படையெடுத்து வரும் பக்தர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 1:41 PM IST

Thaipusam
தைப்பூசத் திருவிழா

Thaipusam: தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரயில் படையெடுத்து வரும் பக்தர்

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி திருக்கோயிலில் நடைபெறக் கூடிய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றானது தைப்பூசம் திருவிழா. இந்த தைப்பூசத்தை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.

இந்த நிலையில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், வேல் குத்தியும் பாதயாத்திரையாக வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த 369ம் ஆண்டை முன்னிட்டு, கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சண்முகருக்கு அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை திபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோயிலில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து சேர்கிறார்.

தைப்பூசம்: நாளை (ஜன.25) தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு வைத்து சாமிக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து சாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார். இந்த தைப்பூசத்தை முன்னிட்டு சுமர்ர் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பாளையங்கோட்டை சாலையில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பக்தர்கள் நலனுக்காக கோயில் வளாகத்தில் 2 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவக் குழு செயல்பட உள்ளது. ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர் என அண்ணாமலை விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.