ETV Bharat / state

"இந்தியாவை ஆளும் தகுதி இந்தியா கூட்டணிக்கு இல்லை" - ஓ.பன்னீர்செல்வம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 8:24 PM IST

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

O.Panneerselvam: வரும் நாடளுமன்ற தேர்தலில் 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்த பிரதமர் மோடி தான் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்து இந்தியா முழுமைக்கும் வலுப்பெற்று இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (ஜன. 28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடியேற்றுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட போது நிருபர்கள் என்னிடம் கேட்டனர். அப்போதே நான் கூறினேன், அது ஆண்டிகள் இருக்க கூடிய மடமாகத்தான் முடியும் என்று அப்போதே கூறினேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்த குழுவும் அமைக்கப்பட முடியாது. எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு. அவர்கள் எந்த நேரத்திலும் வெற்றி பெற முடியாது.

அது இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலம் இந்திய திருநாட்டை, மிக வலிமையோடு, 20 மேலை நாடுகள், முன்னேறிய நாடுகள் எல்லாம் பாராட்டக்கூடிய வகையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்திய நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க கூடிய முக்கிய தேர்தல். இந்த தேர்தலிலும் 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்த பிரதமர் மோடி தான் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்து இந்தியா முழுமைக்கும் வலுப்பெற்று இருக்கிறது.

  • திண்டுக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! (28-01-2024) - நேரலை https://t.co/63r9VYoBAB

    — O Panneerselvam (@OfficeOfOPS) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால் இந்த தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும். இப்போதே, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். இப்போதே அவர்களிடம் ஒருங்கிணைக்கின்ற சக்தி இல்லை. அவர்களால் எப்படி நாட்டை ஆள முடியும். இதனால் இந்தியாவை ஆளும் தகுதி அவர்களுக்கு இல்லை.

தற்போது நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் கூட்டணிக்கு தலைமை. இந்த கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கின்றது. கட்சி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என்று எனக்கு மட்டும் தான் தடை போட்டு இருக்கிறார்கள். தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் கட்சி வேட்டி அணியலாம்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் கட்சி வேட்டியை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த மாட்டோம். ஆனால் ஓடுவது அதிமுக ரத்தம். இதை யாராலும் மாற்ற முடியாது. சந்தர்ப்பங்கள் கூடி வரும் போது சசிகலாவை சந்திப்போம். உறுதியாக சந்திப்போம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பு! 9வது முறை முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.