ETV Bharat / state

"புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்" - அமைச்சர் முத்துச்சாமி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 9:45 AM IST

Updated : Feb 4, 2024, 2:18 PM IST

Minister Muthusamy: கோவையில், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி மதுபானம் விலை உயர்வு குறித்து தற்போது பேச முடியாது எனவும், நடிகர் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துகள் எனவும் பேசினார்.

Minister Muthusamy
அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு நேற்று (பிப்.2) வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, 'ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள விலையில்லா மிதிவண்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'மக்களோடு முதல்வர் திட்டம்' மாவட்ட வாரியாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் முடிவு ஏற்படுத்தி, தீர்வு காணப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் பல லட்சம் மக்கள் கொடுத்த மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தவகையில், கோவை மாவட்டத்தில் 601 பேர் மனுக்களுக்கான தீர்வை ஏற்படுத்தி மொத்தம் 11 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான உத்தரவைக் கொடுக்க இருக்கிறோம். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 8ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கேற்கிறார். அதேபோல, வரும் 11ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார்' என்று தெரிவித்தார்.

மதுபானம் விலை உயர்வு: மதுபானம் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'மதுபானம் விலை உயர்வு பற்றிப் பேசுவது இப்போது சரியில்லை. அதைப் பற்றி பின்னாடி சொல்கிறேன்' எனப் பதிலளித்தார். 'கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு குறித்த கேள்விக்கு, கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பதற்கான பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா என அனைத்து பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும்.

நடிகர் விஜய் அரசியல் வருகை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புதுசா வருபவர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் மரியாதை. நாங்கள் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துகள் சொல்கிறோம். திமுகவைப் பற்றி மக்களுக்கு தெரியும். திமுக தனித்துவமான கட்சி.

நாடாளுமன்ற தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்காக நாங்கள் வேலை செய்யவில்லை. அரசு இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி திமுக தொடர்ச்சியாக மக்களுக்குப் பணி செய்து வருகிறது. அந்த வகையில் தான், இப்போதும் பணி செய்து வருகிறோம். தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் பணி செய்வதில்லை. மக்களை நோக்கி எப்போதும் பணி செய்வோம்.

நாதக சோதனை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை குறித்த கேள்விக்கு, நாம் தமிழர் கட்சி மீது வெறுப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை செய்தால் அது தவறு. ஆனால், அதைப் பற்றி நாங்கள் இப்போது கருத்து சொல்வது சரியில்லை என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பிப்.7-இல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

Last Updated : Feb 4, 2024, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.