ETV Bharat / state

இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்கக் கூடாது என்கிறோம்: அமைச்சர் கீதா ஜீவன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 2:14 PM IST

Updated : Jan 26, 2024, 2:50 PM IST

அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை திணிக்கக் கூடாது என்கிறோம்

Geetha Jeevan about imposing hindi: இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்கக் கூடாது என்கிறோம், மும்மொழி இருக்கட்டும், தமிழும் இருக்கட்டும் என கோவில்பட்டியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார்.

இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை திணிக்கக் கூடாது என்கிறோம்

தூத்துக்குடி: இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்க கூடாது என்றே கூறுகிறோம் என கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

தொடர்நது அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும், இந்தி திணிப்பினை எதிர்த்தும், இந்தி திணிப்பினை அறவே ஒழிக்க வலியுறுத்தியும், இந்தி ஒழிக என்று திமுகவினர் போராடி சிறை சென்றனர். அதே கொள்கையில் திமுக இன்றும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

இன்றைக்கும் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம், ஒரு விண்ணப்பத்தில் ஆங்கிலமும், இந்தியும் இருந்தால் அதனை நம்மில் பலரால் நிரப்ப முடியாது, ஆங்கிலமும் நமக்கு சரியாக வரவில்லை என்பதால் தமிழும் இருக்க வேண்டும் என்கிறோம். இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்கக் கூடாது என்கிறோம், மும்மொழி இருக்கட்டும், தமிழும் இருக்கட்டும்.

இதையும் படிங்க: செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: "இருவர் கைது - சட்டரீதியாக நடவடிக்கை" - அமைச்சர் சாமிநாதன் தகவல்!

ஆனால் இன்றைக்குள்ள மத்திய ஆட்சியாளர்கள் இந்தியுடன், சமஸ்கிருஸ்தனத்தினை திணிக்கின்றனர். தமிழ் மொழி செம்மொழி, தமிழர்கள் தொன்மையை குறித்து கீழடி, ஆதிச்சநல்லூர் பறைசாற்றுகிறது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமை, தொன்மையை மறைக்க, ஒழிக்க ஒரு கூட்டம் இன்னும் சதி செய்கிறது.

தமிழ் மொழியினை காத்தால் தான் தமிழ் இனத்தினை காத்திட முடியும் எனும் நோக்கத்தோடு தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் அரும்பாடுபட்டனர். கொள்கைகளை விட்டுக்கொடுக்கமால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். நான் திராவிடன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தைரியமாக பதிவு செய்கிறார்.

திராவிடன் என்ற வார்த்தையை கேட்டதும் சிலருக்கு தூக்கம் வருவதில்லை. தேசிய கீதத்தில் கூட திராவிடம் என்ற வார்த்தை உள்ளது. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், இடைஞ்சல் கொடுத்தாலும், தமிழ் மொழி, தமிழ் இனத்தினை காக்க வேண்டும், தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி புரிந்து வருகிறார். திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார்” என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாது - ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டவட்டம்!

Last Updated :Jan 26, 2024, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.