ETV Bharat / state

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 12:54 PM IST

Updated : Mar 1, 2024, 1:06 PM IST

மாணவர் சேர்க்கை துவக்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மாணவர் சேர்க்கை துவக்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்

Government schools: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மாணவர் சேர்க்கை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் துவங்கியுள்ளது. இதனைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்குச் சேர்க்கை உத்தரவுகளை வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு வாகனத்தையும் கொடிய சேர்த்துத் துவக்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு சீட்டுகளை அங்கிருந்து மக்களுக்கும் பேருந்துகளில் சென்றவர்களுக்கும் வழங்கினார்.

அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுச் செலவிடப்பட்டாலும், அங்கு மாணவரின் சேர்க்கை எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது போன்ற சூழ்நிலையால் பள்ளிகளை மூட வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. எனவே அரசுப் பள்ளியில் உள்ள உட்கட்டமைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணியில் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

மேலும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2024-25ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் அனைவரையும் மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்குக் கட்டாயமாக உயர்த்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும்.

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை சிறப்பு முகாம்,அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள, பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களைப் பிரித்து வழங்கி, சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்.

மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரச்சாரங்கள் வழங்கியும் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்ததுடன், அவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், சீருடைகள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதையும் படிங்க: குழந்தை கடத்தல்; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை..காவல்துறை எச்சரிக்கை

Last Updated :Mar 1, 2024, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.