ETV Bharat / state

மதுரை பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வீதம் 32 ஆண்டு சிறை தண்டனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 1:05 PM IST

Madurai crime news: மதுரை மேலமடை பகுதியில் பெண்ணை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கின் குற்றவாளிகள் இருவருக்கும் நேற்று மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்றம் தலா மூன்று ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

3 ஆயுள் தண்டனை விதித்து மகிளா அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெண்ணை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த மதுரை ரவுடிகள்

மதுரை: பெண்ணை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்றம் நேற்று (ஜன.30) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலமடை பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண் ஒருவரை மேலமடை பகுதியை சேர்ந்த ரவுடிகள் இருவர் மிரட்டி கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில், மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான விஜய் என்ற குருவி விஜய், கார்த்திக் என்ற மௌலி கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மதுரை மாநகர அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்ற உத்தரவின் படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்றம் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் குற்றவாளிகள் எனக் கூறி தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, இருவருக்கும் தலா முன்று ஆயுள் தண்டனைகள் வீதம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக உள்ள நிலையில், விஜய் என்ற குருவி விஜய்க்கு அனைத்து காவல் நிலையங்களிலும் அடிதடி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓசி சிகரெட் தர மறுத்ததால் ஆத்திரம் - கடை உரிமையாளரை பட்டா கத்தியால் மிரட்டிய இளைஞர்கள்! சிசிடிவி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.