ETV Bharat / state

வாக்குப்பெட்டிகளை ஏற்றிச்செல்ல வாகன ஓட்டிகள் மறுப்பு.. கோவில்பட்டியில் பரபரப்பு! - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 4:16 PM IST

Updated : Apr 18, 2024, 4:34 PM IST

TamilNadu Election
TamilNadu Election

TamilNadu Election: சுங்கச் சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் செல்வோம் எனக் கூறி வாகன ஓட்டிகள் கோவில்பட்டி வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

LOK SABHA ELECTION 2024

தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

கோவில்பட்டி வருவாய் வட்டமான கயத்தார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றால், கயத்தார் சாலைப்புதூர் சுங்கச்சாவடியை தாண்டி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பெட்டி மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி கட்டணம் கொடுத்தால் தான் கொண்டு சொல்வோம் என்று கூறி வருவதால், வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருள்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இதை போன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருள்களைக் கொண்டு சென்ற போது தங்களிடம் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வாகன ஓட்டிகள் கோவில்பட்டி வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவண பெருமாள் வாகன ஓட்டிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடிக் கட்டணத்திற்கான பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து, வாகனங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: நாளை வாக்குப்பதிவு.. சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க பலத்த ஏற்பாடு! - Lok Sabha Election 2024

Last Updated :Apr 18, 2024, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.