ETV Bharat / state

Live Updates: சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்! - Lok sabha elections

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 9:57 AM IST

Updated : Mar 21, 2024, 4:00 PM IST

Etv Bharat
Etv Bharat

15:59 March 21

சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம்

14:49 March 21

ஆளுநர் Vs பொன்முடி விவகாரம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என எப்படி கூற முடியும்? என பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ய மறுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

14:48 March 21

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ் அணி போட்டியில்லை?

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிடவில்லை எனவும் ஆனாலும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க உள்ளதாகவும் தகவல்

12:32 March 21

தேமுதிக அலுவலகத்தில் ஈபிஎஸ்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

12:29 March 21

ஏப்.13 முதல் கோடை விடுமுறை

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதியோடு நிறைவடையவுள்ளது.

11:31 March 21

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் களமிறங்கும் அதிமுக!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

11:05 March 21

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

1) ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம் குமார்

2) வேலூர் - பசுபதி

3) திருவண்ணாமலை - கலியபெருமாள்

4) நீலகிரி - தமிழ்ச்செல்வன்

5) கோவை - சிங்கை ராமச்சந்திரன்

6) தருமபுரி - அசோகன்

7) கள்ளக்குறிச்சி - குமரகுரு

8) திருப்பூர் - அருணாச்சலம்

9) திருச்சி - கருப்பையா

10) பெரம்பலூர் - சந்திரமோகன்

11) கன்னியாகுமரி - நசரத் பசிலியான்

12) மயிலாடுதுறை - பாபு

13) பொள்ளாச்சி - கார்த்திகேயன்

14) சிவகங்கை - சேவியர் தாஸ்

15) நெல்லை சிம்லா - சிம்லா முத்துச்சோழன்

16) புதுச்சேரி - தமிழ்வேந்தன்

17) தூத்துக்குடி - சிவசாமி

10:47 March 21

நடிகர் கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு

நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

10:42 March 21

தானேவில் பயங்கர தீ விபத்து!

Dombivili East Fire Accident: மகாராஷ்டிரா மாநில தானே அருகே உள்ள டோம்பிவிலி கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் குடோனில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்

10:23 March 21

"அண்ணாமலை ஓர் பொய் புழுகி"

திமுக தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்யும் பாஜக தலைவர் அண்ணாமலை ஓர் பொய் புழுகி என அமைச்சர் மனோ தங்கராஜ் கட்டமாக விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

10:19 March 21

அதிமுக 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று சற்று நேரத்தில் வெளியிடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

10:16 March 21

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

10:09 March 21

ரத விதியில் தவழ்ந்து வந்த ஆழித் தேர்!

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

09:51 March 21

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

09:49 March 21

ரூ.50 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து 49,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென விலை ஏற்றம் கண்டுள்ளது

09:37 March 21

சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் ரெய்டு

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் (G-Square) தலைமை அலுவலகத்தில் இன்று காலை 7 மணி முதல் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

Last Updated :Mar 21, 2024, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.