ETV Bharat / state

"கருத்து கணிப்பை தாண்டி மக்களவையில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" - கி.வீரமணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 10:58 PM IST

k veeramani
கி.வீரமணி

k veeramani: எல்.முருகன் இணை அமைச்சராக இருந்த போதும் அவர் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் தேர்தல் கருத்து கணிப்புகளை தாண்டி இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி கருத்து தெரிவித்தார்.

கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்சி: திருச்சியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று மத்திய பாஜக அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வைரமணி,
மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக,தமுமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டவர்.

இதனையடுத்து செய்தியாளருக்குப் பேட்டி அளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் “தமிழகத்தில் திமுக 35 இடங்களில் வெல்லும் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெறும் என ஒரு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது அதில் ஒரு சிறிய திருத்தம் 35 சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பெட்டியைத் திறந்து பார்த்தால் 40ம் இருக்கும் இந்தியா முழுவதும் 400‌ இருக்கும். கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தாண்டி இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

ஏனென்றால் மக்களுடைய வேதனை அந்த அளவுக்கு இருக்கிறது. தென்னாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கிறது ஏனென்றால் மணிப்பூருக்கே போகாத ஒரு பிரதமரைப் பெற்று இருக்கிறோம் வடநாட்டு மக்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். தேர்தலே நடத்த முடியாத பிரதமர் இருக்கிறார் எனக் காஷ்மீர் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணி இருப்பது என்பது கொள்கைக்கான கூட்டணி, பதவிக்கானது அல்ல என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் ஜாதியைக் குறிப்பிட்டு டி.ஆர். பாலு பேசவில்லை. அமைச்சரான அவரின் செயல்பாடுகள் குறித்துத்தான் டி.ஆர். பாலு பேசினார். எல்.முருகன் இணை அமைச்சராக இருந்தபோதும் அவர் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதி கூடப் பெற்றுத் தரவில்லை அதையெல்லாம் வைத்துத் தான் டி.ஆர். பாலு அவ்வாறு பேசினார். ஆனால் அதனை ஜாதி ரீதியாகத் திரித்துப் பரப்புவது ஆர்.எஸ்.எஸ் எப்பொழுதும் செய்யும் யுக்தி. தமிழகத்தில் பா.ம.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் ஏலம் போடும் அரசியலைக் கைவிட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: நெல்லையில் பாஜகவைக் கண்டித்து திமுக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.