ETV Bharat / state

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் களமிறங்கும் சூரியமூர்த்தி.. பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 12:48 PM IST

KMDK  press meet
KMDK press meet

Namakkal KMDK Candidate: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக, சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொமதேக ஈஸ்வரன் பேட்டி

ஈரோடு: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாமக்கல் தொகுதியில் கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என ஈரோட்டில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், "2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி வேட்பாளராகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி போட்டியிடுகிறார். நாமக்கல் தொகுதியில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையாக பணியாற்றி கூட்டணி வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.

திமுக கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்புகள் வெளியாகின்றன. இது எங்களை தேர்தல் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு தேர்தலை விடக் கடுமையாக பாடுபட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஆரம்பப் புள்ளியாகத் தமிழகத்தில் உள்ள இந்திய கூட்டணி கட்சிகள் வெற்றி அமையும்.

இந்தியாவை யார் ஆளக்கூடாது என்று வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் திட்டமிட்டுள்ளோம். இது தான் எங்கள் தேர்தல் பிரசார வியூகம். 10 ஆண்டுகளில் விஞ்ஞான பூர்வமாக ஊழலை பாஜக செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் உட்பட யாரும் கடந்த 10ஆண்டுகள் பாஜக ஆட்சி மீது எந்த விமர்சனமும் செய்யவில்லை. இதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு அதிமுக- பாஜகவை ஆதரிக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது"என்றார்.

யார் இந்த சூரியமூர்த்தி?: நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூரியமூர்த்தி 1992 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டுள்ளார். தற்போது கொமதேக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பணியாற்றி வருகிறார்.

இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியிலும், 2006-ம் ஆண்டு வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் கொமதேக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 17ஆண்டுகளுக்கு கொமதக கட்சியில் பணியாற்று வரும் சூரியமூர்த்தி 10 ஆண்டுகள் நிலைய செயலாளர் ஆகவும் 7 அண்டுகள் மாநில இளைஞர் அணி செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க: உதவிய இளைஞர்களுக்கு ரயிலில் லிப்ட் கொடுத்த ரயில் பைலட்.. நெல்லையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.