ETV Bharat / state

ஏஐ தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்பது அவசியம் - பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்திய கனிமொழி எம்.பி.!

ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்கிறார் கனிமொழி எம்பி.

மாணவிகளிடையே பேசிய கனிமொழி எம்பி
மாணவிகளிடையே பேசிய கனிமொழி எம்பி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 16, 2025 at 1:13 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: எதிர்காலத்தில் மாணவர்கள் இந்த உலகத்தை வெல்லக்கூடியவர்களாக, உலகத்தை அவர்களுடைய குடை நிழலின்கீழ் கொண்டு வரக்கூடியவர்களாக, இந்த சமூகத்தை மாற்றி அமைக்கக்கூடியவர்களாக வரவேண்டும் என மாணவிகளிடையே பேசி உற்சாமூட்டியுள்ளார் கனிமொழி எம்பி. மேலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ஏஐ தொழில்நுட்பம் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவிகளிடையே பேசி அவர்களை உற்சாகமூட்டினார். அவர் பேசுகையில், "ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஏஐ தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பம் பற்றிய பல்வேறு தகவல்களை நம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஒரு பயிற்சியாளர் அளவிற்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடியவர் அவர். முன்பு ஒரு தகவலைப் பெற கூகுள் செய்யவேண்டி இருக்கும். ஆனால் தற்போது ஏஐ தொழில்நுட்பமே அதனைத் தேடி கொடுத்து விடுகிறது.

இதையும் படிங்க: 21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் - கும்பகோணம் தீ விபத்து உணர்த்தும் பாடம் என்ன?

இன்றைக்கு அறிவுதான் பவர். அறிவை பொருத்தவரை ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. யாருக்கு அதிகப்படியான அறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்கிறதோ அவர்கள்தான் இன்றைக்கு கொடிகட்டி பறக்கிறார்கள். மற்ற எல்லாரையும்விட தலைசிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

நாம் அனைவருமே இன்று ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் ஏஐ தொழில்நுட்பம் கட்டாயம் இருக்கும். வருங்கால மாணவர்கள் இந்த உலகத்தை வெல்லக்கூடியவர்களாக உருவாக வேண்டும். மேலும் இந்த உலகத்தை ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய குடை நிழலின் கீழ் கொண்டுவரும் அளவிற்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று, இந்த சமூகத்தையே மாற்றி அமைக்கக்கூடியவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்." என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.