ETV Bharat / state

திமுக பிரமுகர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 1:07 PM IST

IT raid in Vellore DMK executive office
IT raid in Vellore DMK executive office

IT raid in Vellore: வேலூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூர்: நாடளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடுமுழுவதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சோதனைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் அறங்காவலர் குழு தலைவரும், வேலூர் திமுக நகர பொருளாளருமான அசோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டப்பாளையம் பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள், 4 பேர் கொண்ட குழு சுமார் நேற்றிரவு 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அசோகனின் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் உள்ள ஆவணங்களை சோதித்த வருமானவரித்துறை அதிகாரிகள், சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாகவும், அந்த ஆவணங்கள் குறித்த தகவல்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு தெரியவரும் எனத் தகவல் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: தீவிரமடையும் பறக்கும் படை சோதனை.. ரூ.5.37 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் பறிமுதல்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கிய நிலையில், திமுக நிர்வாகிக்குச் சொந்தமான அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இதுவரை 11.42 லட்சம் ரூபாய் பணம், 2 பவுன் நகை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்களைக் காண்பித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், நகைகளையும் மீட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் உட்படக் கட்சியினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.