ETV Bharat / state

"குடிசையில்லா தமிழ்நாடு"- ஓராண்டில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 11:25 AM IST

Updated : Feb 19, 2024, 3:56 PM IST

Etv Bharat
Etv Bharat

குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிடும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் 2030ம் ஆண்டுக்குள் 30 லட்சம் புதிய வீடுகளை கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகளில் ஊரக வளர்ச்சிக்கான பிரிவில் இதற்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கிராமப் பகுதிகளில் 8 லட்சம் குடும்பங்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

"குடிசையில் தமிழ்நாடு " என்ற இலக்கை எட்டும் வகையில் 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தங்கம் தென்னரசு கூறினார்.

முதற்கட்டமாக 2024-25ம் நிதியாண்டில், ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.5 லட்ச ரூபாய் செலவீட்டில் கட்டித் தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்!

Last Updated :Feb 19, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.