ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக களம் இறங்குவோம் - விவசாய சங்கங்கள் ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 10:26 PM IST

farmers-associations-staged-a-protest-at-trichy
பி.ஆர்.பாண்டியன் - அய்யாக்கண்ணு

Trichy farmers protest: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க உறுப்பினர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருச்சி: கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்திட வேண்டும். சம்பா சாகுபடிக்கு உதவும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான முருகேஷை வேளாண் அதிகாரியாக நியமிக்கக் கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 7500 இழப்பீடு வழங்க வேண்டும்.

நீர் நிலைகளை நிறுவனங்கள் அபகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது "டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி நடைபெற்றது. இதில் 5 லட்சம் ஏக்கர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

இதனையடுத்து 10 லட்சம் ஏக்கருக்குத் தேவையான தண்ணீரை வழங்குமாறு தமிழக அரசிடம் முறையிட்டோம். ஆனால் குடிநீர் என்ற போர்வையில் தனியார் ஆலைகளுக்கு தண்ணீரைத் தேக்கி வைத்துள்ளது தமிழக அரசு. மேட்டூர் அணையைத் திறக்க மறுக்கிறது, இதன் காரணமாக அணையை திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் ஒன்றிணைந்து மேட்டூர் அனைக்கு சென்று போராடவுள்ளோம்.

இது முதல் கட்ட போராட்டம்தான், இதே போல் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வந்தால், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிராக களமிறங்குவோம்" என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில் "கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் இணைய உள்ளோம்.

பயிர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தருவதாக மோடி அரசு கூறியது போல் கொடுக்கவில்லை. திருவண்ணாமலையில் மட்டும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடவில்லை. ஸ்ரீரங்கத்தில் போராடிய படையப்பா என்ற நபர் மீது திருச்சி மாவட்ட ஆட்சியர் குண்டாஸ் சட்டம் போட்டு இருக்கிறார்.

விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும் என்று சொன்னால் தெரியாது என்று கூறுகிறார்கள், ஆனால் விவசாயிகள் மீது குண்டாஸ் போடுகிறார்கள். இது குறித்து கலெக்டரிடம் மனு அளித்து போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தனிநபர் காப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைள் நிறைவேற்றவில்லையனில் அடுத்த மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்" என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டா? நயினார் நாகேந்திரனுக்கு எதிராக போஸ்டர்.. நெல்லையில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.