ETV Bharat / state

ஆளுநரின் விமர்சனத்திற்குப் பதிலடி; கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் நெல்லையில் வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 4:59 PM IST

கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் நெல்லையில் வெளியீடு
கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் நெல்லையில் வெளியீடு

Governor Speech Issue: கால்டுவெல் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டாதவர் என ஆளுநர் விமர்சித்து நிலையில், பேராயர் பர்ணபாஸ் கால்டுவெல், “எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்த கல்வி மான். அவர் திருநெல்வேலி மாவட்டம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி அறியாமையில் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்ற அய்யா வைகுண்டசாமியின் 192வது அவதாரத் தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், சனாதனத் தர்மத்தைக் காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். கால்டுவெல் மற்றும் ஜி.யு. போப் இருவரும் பிரிட்டிஷ் அரசால் மதமாற்றத்துக்காக நியமிக்கப்பட்டவர்கள் என கூறினார். ஆளுநரின் இந்த பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் நெல்லையில் வெளியீடு
கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் நெல்லையில் வெளியீடு

கால்டுவெல் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தமிழகத்தில் தங்கி இருந்து, தமிழ் மொழியை ஆராய்ந்து ஒப்பிலக்கணம் எழுதியுள்ளார், கால்டுவெல், ஜி.யு.போப் இருவர் குறித்தும் தமிழகப் பள்ளி பாடப் புத்தகங்களில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இது போன்று சூழ்நிலையில் இவ்விருவர் குறித்து, ஆளுநர் பேசிய சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், பேராயர் கால்டுவெல் வரலாற்று ஆய்வுக்குழு சார்பில், தென்னிந்தியத் திருச்சபையின் நெல்லை மண்டலப் பேராயர் பர்னபாஸ் அய்யா வைகுண்டர் தலைமை பத நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் கூட்டாக திருநெல்வேலியில் இன்று (மார்ச் 11) பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பேராயர் பர்ணபாஸ், “கால்டுவெல் மிகவும் கல்வி அறிவு பெற்றவர். அயர்லாந்து நாட்டில் பிறந்த கால்டுவெல் 1838 கப்பலில் இந்தியா வந்த போது, அவர் தமிழ் பயின்றார். பிறகு 1941ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடிக்கு வந்தார். சென்னையிலிருந்து குதிரையில் கொடைக்கானல் சென்ற போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது, இருப்பினும் தமிழ் மீதுள்ள பற்றால் கொடைக்கானலிலிருந்து நடந்தே இடையன்குடிக்கு வந்தார்.

அவர் மிகப்பெரிய கல்வி மான் இங்கிலாந்தில் பி.எச்.டி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவரை கல்வி அறிவு இல்லாதவர் என்று ஆளுநர் சொல்வது மிகவும் வருத்தத்தக்கது. 1856ல் கால்டுவெல் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியிடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியால் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்றாலும் தமிழ் மொழி தான், சிறந்த மொழி என மற்ற மொழிகளோடு தமிழை ஒப்பிட்டு, ஒப்பிலக்கணத்தை இவர் எழுதியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் குறித்த புத்தகத்தையும் எழுதியுள்ளார். எல்லாவற்றையும் கற்று தேர்ந்த கல்வி மான் அவர். எனவே ஆளுநர் அறியாமையில் பேசுகிறார்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பால பிரஜாபதி அடிகளார், “கால்டுவெல் பல மொழிகளை கற்று தமிழ்மொழி சிறந்தது என்று சொன்னார். தமிழை அழிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் இது போன்று பேசுகிறார்.

அய்யா வைகுண்டசாமி போராடி சிறையும் பெற்றார். ஆளுநர் வரலாறே தெரியாமல் வரலாறு படைக்கக் கூடாது. அய்யா வைகுண்டர் சனாதனத்தைக் காக்கப் பிறந்தவர் என்கிறார். சனாதனத்தில் இருந்து மக்களை விடுவிப்பது தான் அய்யா வழி. கவர்னர் பதவியை எடுத்து விட வேண்டும். தேவையில்லாத பதவி தேவையில்லாத பிரச்சினை. ஆளுநரின் இந்த பேச்சைக் கண்டித்து ஏற்கனவே நாங்கள் போராட்டக் களத்தில் தான் இருக்கிறோம்.

அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம். தேர்தல் நேரத்தில் பொதுவாக வடநாட்டுக்காரர்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அதைத்தான் ஆளுநர் செய்துள்ளார்” என தெரிவித்தார். முன்னதாக கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரமாக கால்டுவெல் 1856 இல் டாக்டர் பட்டம் பெற்றதற்கான சான்றிதழைப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளிவாசல் திறப்பு விழா..சீர்வரிசையுடன் சென்ற இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.