ETV Bharat / state

கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்? எஸ்.பி அலுவலகத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் தஞ்சம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 9:21 PM IST

dmk-figure-who-threatened-to-kill-him-to-join-a-private-company-as-a-partner
தனியார் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்க்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் - எஸ்.பி அலுவலகத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் தஞ்சம்

DMK leader threatening businessman: திமுக பிரமுகர் மணிகண்டன், தனியார் ஹாலோ பிளாக் ஃபேக்டரி மற்றும் நிலத்தை அபகரிக்க கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொழிலதிபர் ரஞ்சித் குமார் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஞ்சித் குமார். இவர் சுக்காம்பட்டியில் ஹாலோ பிளாக் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். ஏற்கனவே காண்ட்ராக்ட் பணியில் வேலை செய்த பொழுது, சுக்காம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அகரம் பேரூராட்சியில் இளைஞரணி திமுக பொறுப்பாளராக உள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய ரஞ்சித் குமார் தனியாக ஹாலோ பிளாக் தொழிற்சாலை நடத்தி வருவதால், ஆத்திரமடைந்த மணிகண்டன் ரஞ்சித் குமாரிடம் தன்னையும், தொழிற்சாலை பங்குதாரராக சேர்க்க வேண்டும் என பலமுறை கேட்டு உள்ளார். அதற்கு உடன்படாததால் பலமுறை மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரஞ்சித் அலுவலகத்திற்குச் சென்று டேபிள் சேர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து உள்ளனர். இதனையடுத்து, இன்று (மார்ச் 17) காலை சுக்காம்பட்டி பிரிவில் உள்ள டீக்கடையில் ரஞ்சித் குமார் அமர்ந்து இருந்த போது, மணிகண்டன் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் ரஞ்சித் மனைவி, குழந்தை மற்றும் அவரது அண்ணன் வீட்டிலிருந்த குழந்தைகள் மற்றும் அண்ணன் மனைவி ஆகியோரை தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கு இருந்த காரையும் அடித்து நொறுக்கியதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் செல்லும் பொழுது, மணிகண்டன் மற்றும் அவர்கள் உறவினர்கள் வழிமறித்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிருக்குப் பயந்த ரஞ்சித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இதையும் படிங்க: 21 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - மார்ச் 27 வரை நீதிமன்றக் காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.