ETV Bharat / state

"இந்திய நாடு மதசார்பு நாடக உருவாக கூடாது" - திருச்சியில் சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா பேட்டி..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 6:44 PM IST

சிபிஐ பொது செயலாளர் டி ராஜா செய்தியாளர் சந்திப்பு
சிபிஐ பொது செயலாளர் டி ராஜா செய்தியாளர் சந்திப்பு

CPI General Secretary D.Raja Byte: இந்திய நாடு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என அம்பேத்கர் விரும்பினார். ஆனால், இன்று இந்திய நாடு ஆர்.எஸ்.எஸ் பிடியில் உள்ளது என சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

சிபிஐ பொது செயலாளர் டி ராஜா செய்தியாளர் சந்திப்பு

திருச்சி : 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி. ராஜா பேசுகையில், "ஜனநாயகத்தில் பெரும் அச்சுறுத்தல் உண்டாகி இருக்கிறது. இந்திய நாடு மதச்சார்பு நாடக உருவாகக் கூடாது. இந்திய நாடு மதச்சார்பற்ற ஜனநாயக நாடக இருக்க வேண்டும் என அம்பேத்கர் விரும்பினார். இன்று இந்திய நாடு ஆர் எஸ் எஸ் பிடியில் உள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.

இந்திய நாடு பன்முக நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. ஆனால், இந்தியப் பிரதமர் மோடி 3வது இடத்தில் உள்ளது என கூறினார். 2 கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். கருப்புப் பணம் மீட்கப்படும், 15 லட்சம் நிதி வைக்கப்படும் ஒவ்வொருவர்களின் தனி நபர் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பப்படும் என கூறினார். எல்லாருக்குமான ஆட்சி என கூறினார்.

ஆனால், கார்ப்பரேட்க்கு துணை போகும் ஆட்சியாக‌ பாஜக உள்ளது. 140க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதுவே நாட்டின் அழிவிற்கு அறிகுறி.மோடியால் பாராளுமன்ற நிலைகுலைந்து போய் உள்ளது. ஜெர்மனியில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது. இதே போலப் பல நாடுகளைப் பார்த்து இருக்கிறோம். நாட்டிற்குப் பின்னடைவாக இருந்து உள்ளது.

இந்திய ஜனநாயகம், குடியரசு சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் விரும்புகிறது. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என நாட்டு மக்களும் முழக்கமாக உள்ளது. அமலாக்கத்துறை போன்ற சக்தியை வைத்துக்கொண்டு எதிர் அணித் தலைவர்களை அச்சுறுத்துகின்றனர்" என்றார்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் மாறுபட்டுச் செயல்படுகின்றனர் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், "எல்லா மாநிலங்களிலும் அரசியல் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை. பாஜகவினர் இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். எதிர் அணியினரை ஏவி விடுகின்றனர். இந்தியா கூட்டணியினர் இதனைப் பேசித்தான் தீர்க்க வேண்டும்.

மக்களின் அடிப்படை பிரச்சனைகளைப் பார்க்காமல் ஒரு நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என மக்களைத் திசை திருப்பி பார்க்கின்றனர்" என்றார். வேலைக்கு வந்த சிறுமி கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த முத்தரசன் கூறுகையில், "திமுக எம்எல்ஏ-வின் குடும்பத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டத்துக்குரியது. இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல அண்ணாமலை போன்ற பாஜகவினர் பத்திரிக்கையாளர் மீது வன்மமாகப் பேசி வருகின்றனர். தேர்தல் கூட்டணி மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொஞ்ச நாள் பொறு தலைவா.. கோவையில் தேவாவின் இசைக்கச்சேரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.