ETV Bharat / state

சிசிடிவியில் சிக்கிய கொலையாளி.. இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் படுகொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்! - Poonamallee Murder

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 10:24 PM IST

Poonamallee Murder: சென்னை பூந்தமல்லி அருகே இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட ராஜாஜி, கைது செய்யப்பட்ட கோபால்
கொல்லப்பட்ட ராஜாஜி, கைது செய்யப்பட்ட கோபால் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் டீக்கடக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியில் மாநில தலைவர் ராஜாஜியை கொடுரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை நடந்த கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ராஜாஜியை கொடூரமாக கொலை செய்தது, காட்டுப்பாக்கம் பகுதியைச் கிருஷ்ணகுமார் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த கிருஷ்ண குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கோபால் மற்றும் சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறுகையில், "காங்கிரஸ் பிரமுகரான கோபாலின் மனைவி கவுரி. இவர் கடந்த சில ஆண்டுகளாக கோபாலை பிரிந்து ராஜாஜியுடன் வாழந்து வந்துள்ளார். அவர் கவுரியை தனது மனைவி என சமூக வலைத்தளப் பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் பதிவிட்டு வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் கவுரி இறந்து போன நிலையில், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கவுரியை தனது மனைவி என்று கூறி, அவரது பெயரில் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து உள்ளதாக ராஜாஜி போஸ்டர்கள் ஒட்டி அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கோபாலின் சொத்துக்களில் பாதி அவரது மனைவி கவுரியின் பெயரில் இருப்பதால், இது சம்பந்தமாக கொலை செய்யப்பட்ட ராஜாஜிக்கும், கோபாலுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ராஜாஜியின் சகோதர் கண்ணன் என்பவருக்கும், கிருஷ்ணகுமாருக்கும் இடையே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கிருஷ்ணகுமார் ராஜாஜியின் தம்பியை தாக்கி காலை உடைத்துள்ளார்.

இந்த தகராறு குறித்து தெரிந்த கோபால், ராஜாஜியும், கண்ணனும் சேர்ந்து கொன்று விடுவார்கள் எனக் கூறி, அதற்குள் நீ முந்திக்கொள் நான் பார்த்து கொள்கிறேன் என கிருஷ்ணகுமாரிடம் கோபால் கூறியுள்ளார். அதன் பின்னர், நேற்று ராஜாஜியை டீக்கடைக்குள் புகுந்து, சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார் கிருஷ்ணகுமார்" எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: தனியாகச் செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த பைக் ஆசாமி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.