ETV Bharat / state

"தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை" - போதைப்பொருள் புழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்! - EDAPPADI PALANISWAMI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 10:05 PM IST

circulation-of-drugs-among-youth-and-students-is-condemnable-aiadmk-palaniswami
"இளைஞர்கள் மற்றும் மாணவர் இடம் போதைப்பொருட்கள் புழங்குவது கண்டனத்துக்கு உரியது" - எடப்பாடி பழனிசாமி!

AIADMK General Secretary Edappadi Palaniswami: இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும், கண்டனத்துக்கு உரியதாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது X வலைத்தளப் பதிவில், "கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர்ப் பகுதியில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.

அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும், கண்டனத்துக்கு உரியதாகும், சீர்கெட்டுப் போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கத் தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "அதிமுக நல்லவர்கள் கையில் வரவேண்டும் என அண்ணாமலை நினைத்துள்ளார்" - டிடிவி தினகரன் பேட்டி! - TTV Dhinakaran

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.