ETV Bharat / state

மெட்ரோ ரயில் பணி: சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 8:27 PM IST

சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

chennai traffic diversion: சென்னையில் நடைபெற்று வரக்கூடிய மெட்ரோ ரயில் பணி காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை: சென்னையில் நடைபெற்று வரக்கூடிய மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகளுக்காக இன்று முதல் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலைகளில் அடுத்து வரக்கூடிய ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகளுக்காக அண்ணா மேம்பால மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை வழியாகவும் ஹாடேஸ் சாலை உத்தமர் காந்தி சிலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி) இந்த பாதை ஒரு வழி பாதையாக செயல்படுத்தப்படும்.

இதை போல, ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம் ( மாற்று பாதை ஒரு வழிப்பாதை). மேலும் அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடது புறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் மற்ற இடங்களுக்கு செல்லலாம்.

வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலை பிள்ளை ரோடு ஜி என் செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் சென்று அடையலாம்.

மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒரு வழி பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் இதற்கான ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை முதல் பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.