ETV Bharat / state

2024 மார்ச் மாதத்தில் மட்டும் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு! - passengers travel in metro

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 6:55 PM IST

மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
மார்ச் மாதத்தில் மட்டும் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்

Metro passengers details: 2024 ஜனவரி 01 முதல் மார்ச் 31 வரை சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஒரே நாளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 710 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

சென்னை: மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதிலிருந்து இது நாள் வரையிலான பயணிகளின் எண்ணிக்கையில், 2024 மார்.04 அன்று பயணித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று (ஏப்.01) அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு, நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 67 ஆயிரத்து 449 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாகப் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதிலிருந்து இது நாள் வரையிலான எண்ணிக்கையில், இதுவே அதிக எண்ணிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் கூறியுள்ளதாவது; 2024 ஜன.01 முதல் ஜன.31 வரை மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 01 ம் தேதி முதல் 29ம் தேதி வரை மொத்தம் 86 லட்சத்து 15 ஆயிரத்து 8 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மார்ச்.01 ம் தேதி முதல் 31ம் தேதி வரை மொத்தம் 86 லட்சத்து 82 ஆயிரத்து 457 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மார்.04 அன்று 3 லட்சத்து 34 ஆயிரத்து 710 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, மார்ச் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 34 லட்சத்து 62 ஆயிரத்து 83 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதில் ஆன்லைன் QR (Online QR) பயன்படுத்தி 2 லட்சத்து 5 ஆயிரத்து 653 பேரும், ஸ்டாடிக் QR (Static QR) பயன்படுத்தி 2 லட்சத்து 47 ஆயிரத்து 977 பேரும், பேப்பர் QR (Paper QR) பயன்படுத்தி 20 லட்சத்து 5 ஆயிரத்து 931 பேரும், பேடிஎம் (Paytm) பயன்படுத்தி 4 லட்சத்து 963 பேரும், வாட்ஸ் ஆப் (Whatsapp) பயன்படுத்தி 3 லட்சத்து 81 ஆயிரத்து 369 பேரும், போன்பே (PhonePe) பயன்படுத்தி 2 லட்சத்து 12 ஆயிரத்து 237 பேரும், ஓ.என்.டி.சி (ONDC) பயன்படுத்தி 7 ஆயிரத்து 953 பேரும், பயணம் செய்துள்ளனர்.

மேலும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 37 லட்சத்து 64 ஆயிரத்து 44 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 54 ஆயிரத்து 849 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையைப் பயன்படுத்தி 5 ஆயிரத்து 512 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13 லட்சத்து 95 ஆயிரத்து 969 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாகப் பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மோடி தமிழ் கற்க நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்புகிறோம்" - தேர்தல் பரப்புரையில் கனிமொழி பேச்சு! - Kanimozhi Election Campaign

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.