ETV Bharat / state

சென்னையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்.. பணிகளை துவக்கி வைத்த பிறகு ஆணையர் கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 5:02 PM IST

சென்னையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
சென்னையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

Chennai corporation commissioner Radhakrishnan: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணியானது இன்று தொடங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் கொசு மருந்து தெளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு வார்டில் உள்ள நீர்நிலைகள், மக்கள் தொகை என கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றது போல், கொசு மருந்து தெளிக்கும் பணியானது இன்று(ஜன.30) தொடங்கபட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 123, செயின்ட் மேரிஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் விளையாட்டு மைதானத்தில் கொசு மருந்து தெளித்தல் மற்றும் புகைபரப்பும் பணியினை தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, திரு.வி.க.நகர் 74 வார்டு பகுதியில், கொசு மருந்து தெளித்தல் மற்றும் புகைப்பரப்பும் பணிகளை மேயர் பிரியா தொடக்கி வைத்தார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மழைக்காலம் முடிந்தவுடன், ஆங்கெங்க தண்ணீர் தேங்கி நிற்கலாம். மேலும் கழிவு நீர் மற்றும் தூய்மையான நீரில் கொசுக்கள் உருவாகலாம். இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும் இதன் தொடர்சியாக சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் கொசு மருந்து தெளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

மேலும் ஒவ்வொறு வார்டில் உள்ள நீர்நிலைகள், மக்கள் தொகை என கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றது போல், கொசு மருந்து தெளிக்கும் பணியானது இன்று தொடங்கபட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், நிறுவனங்களும் உள்ளன. அதற்கு ஏற்றது போல் பணியாளர்கள், கொசு மருந்து தெளிப்பான்கள் போன்றவை அதிகரிக்கபட்டு அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

மேலும், சாக்கடை நீரில் உருவாகும் கொசுக்களை நாம் அழித்தாலும், நல்ல நீரில் உருவாகும் மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களை பொதுமக்கள் கவனக் குறைவாக விட்டுவிடுகிறார்கள். இதற்கான விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னை மாநகராட்சியில், கொசு மருந்து தெளிக்கும் பணிக்காக 3ஆயிரத்து 319 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 362 மருந்து தெளிபாண்கள், 69 பவர் ஸ்பேர் உள்ளிட்ட 65 புகை தெளிக்கும் வாகனங்கள் உள்ளன. மேலும், தொடர்ந்து கொசு ஒழிப்பு மருந்து போதுமானளவு உள்ளது. மேலும் தெருவில், திரியும் மாடுகள் மற்றும் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரூப்-4 தேர்வு தேதியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி: 6,244 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.