ETV Bharat / state

"ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டும் தான் 'உதயசூரியன்' உதிக்கிறது" - நிர்மலா சீதாராமன்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 5:32 PM IST

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி

Krishnagiri Election Campaign: போதைப் பொருட்களின் ஆதாயத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் குடும்பத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கிருஷ்ணகிரி தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் C.நரசிம்மனை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

அப்போது, "மழைக்கால, குளிர்கால பறவை போல மோடி வருவதாக முதல்வர் விமர்சிக்கிறார். அந்த வார்த்தையே தவறு. இந்திய நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஒவ்வொருமுறையும் தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வரும் போதும் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆன திட்டங்களைக் கொடுத்துச் செல்கிறார். தொழில்களை அவர் கொடுத்துச் சென்றால் கமிஷன் பெறுவதற்காக இவர்கள் வருகிறார்கள்.

குடிப் பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதைப் பார்க்கிறோம். குடிப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் வேலை கொடுத்து அவர்களது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற செயலை செய்தால், இவர்கள் அவர்களது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகப் போதைப் பொருளை இறக்குமதி செய்து இளைஞர்களை அடிமையாக்கும் இந்த குடும்பத்தை மீண்டும் ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கக் கூடாது.

ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பிலிருந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரம் உள்ளன. போதைப் பொருட்கள் மூலமாகக் கோடி கோடியாய் சம்பாதித்து வாழப் பார்க்கிறார்கள். போதைப் பொருட்கள் ஆதாயத்தால் எந்த குடும்பமும் வாழ்ந்ததில்லை.

போதைப் பொருட்களின் ஆதாயத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் குடும்பத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும். தேர்தல் அன்று நமது குடும்பத்தில் உதயமில்லாமல் இருட்டைக் கொண்டுவந்த திமுகவை நிராகரிக்க வேண்டும். உதயசூரியன் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் தான் உதிக்கிறது.

நாடு நல்லா இருக்க வேண்டுமானால், ஊழல் இல்லாத அரசும், அரசியல்வாதியும் அமைய வேண்டும். அது நம் பிரதமர் மோடியைப் போல இருக்க வேண்டும். வேலைவாய்ப்புக்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு 2047க்குள் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு வழங்கி வெளிநாடுகளைப் போன்று ஊதியம் அளிக்கப்படும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; மூளையாக செயல்பட்ட இருவர் அதிரடி கைது! - Rameshwaram Cafe Blast Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.