ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி.. சிசிடிவியில் சிக்கிய நபர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 8:00 AM IST

Updated : Feb 15, 2024, 11:13 AM IST

பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது
பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது

EPS PA house robbery: ராசிபுரம் அருகே சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (32). முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு உதவியாளராக பணிபுரிந்து வரும் இவர், தனது குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வருகிறார். மேலும், இவருக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில், அவரது தந்தை செல்வக்குமார் (60), தாய் விஜயலட்சுமி (55) மற்றும் நிறை மாத கர்ப்பிணியான அருண்பிரகாஷின் சகோதரி அருள்ரம்யா (27) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (பிப்.10) இரவு 12.20 மணி அளவில், 2 சொகுசு கார்களில் வந்த 10 பேர் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் வெளி கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன் பின்னர், உள்ளே இருக்கும் இரும்பு கேட்டை உடைத்து, வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

அப்போது இருப்பு கேட் உடைக்கப்படும் சத்தம் கேட்டதை அடுத்து, வீட்டில் இருந்தவர்கள் மர்ம நபர்களைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். அதனை அடுத்து அச்சம் அடைந்த கொள்ளை கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த காட்சிகள் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்துள்ளது.

இதையும் படிங்க: தென்காசியில் நகைக்கடையில் திருட்டு: பெண் வாடிக்கையாளர் கைவரிசை!

அதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து ஆயில்பட்டி காவல்துறைக்கு, அருண்பிரகாஷின் தந்தை செல்வகுமார் தகவல் அளித்துள்ளார். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிசிடிசி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைபற்றி, அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, காவல் துறையின் தனிப்படை, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளயடிக்க முயன்ற கும்பலைத் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கார், டிரோன், கத்தி மற்றும் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகிய வற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்டவர்களிடம் கொள்ளை கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!

Last Updated :Feb 15, 2024, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.