ETV Bharat / state

ஓசூரில் தொடரும் காப்பர் வயர் திருட்டு; ஒரே மாதத்தில் 4 டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 6:39 PM IST

ஓசூரில் காப்பர் வயர் திருட்டு
ஓசூரில் காப்பர் வயர் திருட்டு

Copper wire theft: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் வயர் திருடப்பட்டதை தொடர்ந்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூரில் காப்பர் வயர் திருட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி ஊராட்சி திருச்சிப்பள்ளி கிராமத்தில், நேற்று இரவு (பிப்.7) மின் டிரான்ஸ்பார்மரை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிச் சென்றுள்ளனர். இதனால் நேற்றிரவு 11 மணி முதல் திருச்சிப்பள்ளி கிராமப் பகுதிகளில் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இது குறித்து ஊராட்சி வார்டு மன்ற உறுப்பினர் லக்கூரப்பா கூறுகையில், “பேரண்டப்பள்ளி ஊராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு காப்பர் வயர்கள் திருடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டதை மின்வாரியத்தினருக்கு தகவல் அளித்தாலும் காலதாமதமாக வருவதுடன், மின் இணைப்பு வழங்க ஒரு வார காலம் எடுத்துக் கொள்வதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் சூழல் உள்ளது.

எனவே, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். அப்போது முனிராஜ், வெங்கட்ராஜ், சென்ன கிருஷ்ணப்பா, சித்தப்பா, காளியப்பா, சினப்பா ஆகிய விவசாயிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பணம் கேட்டு மிரட்டிய புதுப்பட்டினம் காவலர் சஸ்பெண்ட்; பைக் மோதிய விபத்தில் பதவியை விட்டது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.