ETV Bharat / state

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகை! கூட்டணி பேச்சுவார்த்தையா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 8:24 PM IST

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகை
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகை

BJP JP Natta: அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை, பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

சென்னை: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்துள்ள நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் விதமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார்.

இதை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் என் மண் என் மக்கள் இன்று சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.

சென்னை வந்துள்ள ஜே.பி.நட்டா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு,பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியம் வாய்ந்தவையாக அமையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஜே.பி.நட்டா இன்று தமிழகம் வந்துள்ளதால் பிரதமரின் வருகைக்கு முன்பு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் தமிழக பாஜக உள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் தனியார் ஓட்டலில் தமிழக முன்னாள் முதலமச்சர் ஒ.பன்னீர்செல்வர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன் பின்னர் இன்று இரவு 9 மணியளவில் ஜே.பி. நட்டா தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.

இதையும் படிங்க: நாளை முதல் பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.