ETV Bharat / state

"தமிழகத்தில் நடைபெறும் இந்து விரோத ஆட்சிக்கு 70 நாட்களில் மக்கள் முடிவு கட்டுவார்கள்" - ஹெச்.ராஜா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 1:04 PM IST

H.RAJA
"தமிழகத்தில் நடைபெறும் இந்து விரோத ஆட்சிக்கு 70 நாட்களில் மக்கள் முடிவு கட்டுவார்கள்

H.RAJA: தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்து விரோத ஆட்சிக்கு 70 நாட்களில் மக்கள் முடிவு கட்டுவார்கள் எனவும், நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் விவரங்கள் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள் எனவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உத்தமபாளையத்தில் கூறினார்.

ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மணமக்களை வாழ்த்தினார். இதற்கிடையே உத்தமபாளையம் திரு காளாதீஸ்வரர் ஞானம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "தமிழ்நாடு அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் என்ன புதிய திட்டங்களை புகுத்தி உள்ளது என்பது மக்களுடைய கேள்வியாக உள்ளது. இங்கு ஸ்டிக்கர் ஓட்டுகின்ற வேலையை அமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக பார்த்துக்கொள்கிறார்.

இந்த பட்ஜெட்டில் 5 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்துள்ளனர். இது மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டமாகும். இதை அப்படியே காப்பி அடித்து கலைஞர் கிராமப்புற வீடு வசதி திட்டம் என அறிவித்துள்ளனர்.

திமுக ஏற்படுத்திய கடன்: திமுக அரசாங்கம் வந்ததிலிருந்து எகனாமிக் இன் டிசிபிலின் (economics in discipline) அதிகமாகி இருக்கிறது. இந்த அரசாங்கம் வந்த 3 ஆண்டுகளில் தமிழக மக்களின் தலையில் சேர்த்து வைத்துள்ள கடன் ரூ.2லட்சத்து 80ஆயிரம் கோடி ஆகும்.

மேலும், மூடி மறைக்கப்பட்ட பற்றாக்குறை (uncovered dificit) மட்டும் 49 ஆயிரம் கோடி. வரும் நிதியாண்டில் 1 கோடியே 55 லட்சத்து 584 கோடி புதிய கடன் வாங்க திட்டம். மொத்த கடன் மாநில மொத்த உற்பத்தியில் 26.41% கிட்டதட்ட இந்த அரசாங்கம் 2 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடனை இந்த ஆண்டிற்கு ஏற்படுத்தி உள்ளது. பொருளாதாரம் தெரியாத ஒரு கும்பல் மத்திய அரசாங்கத்தை குறை சொல்வதில் என்ன நியாயம்?

கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மாநிலங்களுக்கு கொடுத்த நிதி 30.5% தான். அதன்பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு 32% அளித்தார்கள். ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களுக்கு 42% அளித்தார்கள். 10 வருடம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது? என கேள்வி எழுப்பினார்.

பொய்களை பேசும் திமுக: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொய்களை அவிழ்த்து விட வேண்டியது. மத்திய அரசாங்கமால் மாநிலங்களுக்கு 1% கூட நிதியை குறைக்க முடியாது. திட்டங்களில் வேண்டுமானால் மாநிலம் அதிகமாகவும், குறைவாகவும் வாங்குகிறது என்று சொல்ல முடியும். எல்லா திட்டங்களும் தமிழ்நாட்டிற்கு தான் அதிகம் கிடைத்துள்ளது. இந்த மாதிரி இருக்கும் போது ஒரு புழுவினி அரசாங்கம் பொய்களை பேசிக் கொண்டிருக்கிறது.

திமுகவிற்கு குட் பை: மக்கள் இந்த மக்கள் உதாவாக்கரை அரசாங்கத்தை உதறித் தள்ளுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற இந்த அரசாங்கம் of corrup, by corrup, for corrup என்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு ஊழல் செய்த அமைச்சருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அவரை சிறையில் வைத்துள்ளது இந்த அரசாங்கம். இதற்கு முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும். ஒவ்வொரு அமைச்சரும் வெட்கப்பட வேண்டும். இன்னும் 70 நாட்களுக்குள் தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து விடும். தமிழக மக்கள் திமுக கட்சிக்கு குட் பை சொல்லி அனுப்பி விடுவார்கள்" என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் எத்தனை தொகுதியில் போட்டியிடுவார் இது பற்றி பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள். தேனி தொகுதியில் யார் போட்டியிடுவார் எனபதை பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் நான் சொல்ல முடியாது என்று கூறினார்.

கோடநாடு கொலை வழக்கு: இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

அமைச்சர் சேகர் பாபு: "கோயில்களுக்கு ஒரு ரூபாய் கூட அரசாங்கம் வழங்கவில்லை. பக்தர்கள் காணிக்கையின் மூலம் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். இது யாரு வீட்டு பணம்? அரசாங்கத்தின் வரி வருவாயிலிருந்து பண்ணால் claim பண்ணலாம்.

HRCE விதியின் படி, ஒரு கோயிலினுடைய 14% வருமானத்தை தான் அரசாங்கம் ஒருங்கிணைந்த நிதிக்கு கொடுக்கலாம். அதற்கு மேல் கொண்டு போனால் திருட்டு என அர்த்தம். கோயில் திருடர்கள் ஆட்சி இது. பழனி கோயிலில் வரும் வருமானத்தை மொத்தமாகத் தான் இந்த அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது.

தேர்தல் வாக்குறுதியில் அளித்த 4,75,000 ஏக்கருக்கு பட்டியல் கொடுக்க வேண்டும். இந்த அரசாங்கம் பொய் பித்தலாட்டம், கோயில் திருட்டு, சிலை திருட்டு என நடத்திக்கொண்டிருக்கிறது".

பட்ஜெட் கூட்டத்தொடர் ஆலோசனை: "என்ன ஆலோசனை செய்யப் போகிறார்கள்? எப்படி இந்து மதத்தை அசிங்கப்படுத்தலாம் என்றா? சனாதன இந்து தர்மத்தை எப்படி அழிப்பேன் என்றா? என்னப் பண்ண போறீங்க இந்து விரோதிகளே.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்கும் வரை இந்த அரசாங்கம் இந்து விரோத அரசு தான். மாற்று மதக் கைக்கூலிகள் தான் திமுக என்று சாடினார். முன்னதாக, முதலமைச்சர் கூறியதாவது நான் கிறிஸ்தவன்; என் மனைவி கிறிஸ்தவர் எனக் கூறிய போது அமைச்சர் சேகர்பாபு 'அல்லேலுயா அல்லேலுயா' என்று கூறினார்.

அமைச்சர் சேகர் பாபுவுக்கு பக்தி இருந்தால் 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று தானே சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அல்லேலுயா என சொன்னால் இந்து விரோதி தானே. ஆகவே இந்த அரசாங்கம் இந்துக்களை ஏமாற்றுகிறது. இந்த முறை இந்துக்கள் உங்களை ஏமாற்ற விட மாட்டார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: புதிய பாம்பன் பாலம்: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.