ETV Bharat / state

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தபால் ஓட்டு கோரி மனு! - 108 ambulance workers

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 5:27 PM IST

ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தபால் ஓட்டு கோரி கோவையில் மனு
ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தபால் ஓட்டு கோரி கோவையில் மனு

108 Ambulance workers: வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தபால் ஓட்டு கோரி கோவையில் மனு

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வாரத்தில் ஏழு நாட்களிலும் பணியாற்றி வருகின்றனர். அதில் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகல் என்று பணி சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 90 சதவிகித பணியாளர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஜனநாயக கடமையான வாக்குரிமையைச் செலுத்த விடுப்பு எடுத்துச் சென்றால், பொதுமக்களின் உயிர் காக்கும் சேவை பாதிப்பு அடையும் என்பதால், எங்களுக்கு தேர்தலின் பொழுது விடுமுறை மறுக்கப்படுகிறது. இதனால், அனைத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஆங்காங்கே பணியில் இருப்போம்.

இதனால், ஜனநாயக கடமையாற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அத்தியாவசிய சேவையில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கும் தபால் ஓட்டுரிமையை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்ச் சங்கத்தலைவர் சிவசாமி கூறுகையில், “கடந்த காலங்களில் வாக்கு உரிமை இல்லாமல் இருந்தது. முன்னதாக, சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: இந்து நாடாரா? கிறிஸ்தவ நாடாரா? நெல்லை காங்கிரசில் போட்டி வேட்பாளர் சொல்வது என்ன? - Former Congress MP Ramasubbu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.