ETV Bharat / state

“பாஜகவுக்கு அதிமுக மறைமுக ஆதரவு”.. அதிமுக கர்நாடகா மாநிலச் செயலாளர் எஸ்.டி.குமார் ராஜினாமாவின் பின்னணி என்ன? - Karnataka AIADMK State Secretary

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 4:11 PM IST

aiadmk-karnataka-state-secretary-st-kumar-has-resigned-from-his-post
அதிமுக கர்நாடகா மாநில செயலாளர் எஸ்.டி.குமார், பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் என்ன?

AIADMK Karnataka State Secretary S.D.Kumar: அதிமுக கர்நாடகாவில் பாஜகவிற்கு மறைமுக ஆதரவு மற்றும் எடப்பாடி மீதான அதிருப்தியால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுகவின் கர்நாடகா மாநிலச் செயலாளர் எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "கர்நாடக மாநிலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுக போட்டியிட்டு வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளரான பின்பு அதிமுக போட்டியிடவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்று, பாஜகவிற்கு ஆதரவளிப்பதாகக் கூறினார். ஆனால், இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது, எந்த கட்சியை ஆதரிப்பது என குழப்பத்தில் உள்ளனர்.

கர்நாடக மாநிலத் தேர்தலில் போட்டியிட நான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் விருப்ப மனுக்களை வழங்கி இருந்தோம். ஆனால், கர்நாடக மாநில தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வெற்றி வாய்ப்பில்லை என எடப்பாடி கூறுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், 9 மாமன்ற உறுப்பினர்களை வென்றிருந்த அதிமுகவால் வெற்றி பெற முடியாதா? ஒற்றைத்தலைமை என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஈபிஎஸ் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பதாக கூறுகிறார். அப்படியானால் இது ஒற்றைத்தலைமையல்ல, கூட்டுத்தலைமை என்பது தான் பொருள்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, கட்சியை அழிக்கின்ற செயல் இந்த கட்சியில் நடப்பதால் கட்சியை விட்டு விலகவில்லை. ஆனால், எனது மாநிலச் செயலாளர் என்ற பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அதிமுக போட்டியிடாத நிலையில், எடப்பாடி பழனிசாமி பாஜக குறித்தும், டெல்லி குறித்தும் பேசாததால் பாஜகவிற்கு அதிமுக மறைமுக ஆதரவு என்பது நிதர்சனமான உண்மை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேனி உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்.. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.