ETV Bharat / state

திருவாரூரில் வேளாண் முனைவர் பட்டம் பயிலும் மாணவர் தற்கொலை! - PhD student commits suicide

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 8:28 PM IST

agriculture-phd-student-commits-suicide-tiruvarur-police investigation
திருவாரூரில் வேளாண் முனைவர் பட்டம் பயிலும் மாணவர் தற்கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை..

Phd student suicide case: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற மாணவர், திருவாரூரில் தங்கி வேளாண் முனைவர் பட்டம் பெற படித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவாரூர் நகரக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கோவக்குளம் குடித்தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் சிவலிங்கம் (28). இவர் முனைவர் பட்டம் பெறுவதற்காக, குறுக்கத்தி வேளாண் பயிற்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றும் பாலசுப்பிரமணியன் என்பவரை வழிகாட்டி பேராசிரியராகக் கொண்டு, முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இதற்காக, திருவாரூர் வாழவாய்க்கால் பகுதியில் உள்ள பேராசிரியர் பாலசுப்பிரமணியனின் உறவினர் வீட்டின் மாடியில் தங்கி உள்ளார்.

இதனிடையே திருவாரூர் மாவட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திலும் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பாலசுப்பிரமணியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், சிவலிங்கம் தங்கி இருந்த வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்துள்ளது.

மேலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கும், பாலசுப்பிரமணியத்துக்கும் தகவல் கொடுத்த நிலையில், திருவாரூர் நகரக் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது, சிவலிங்கம் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

உடனடியாக சிவலிங்கத்தின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக சந்தேகம் மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிவலிங்கத்தின் சொந்த ஊரான கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவலிங்கத்தின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து திருவாரூர் நகரக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: வெள்ளியங்கிரியில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்வு! - Chennai Devotee Died At Velliangiri

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.