ETV Bharat / state

நடிகர் சிம்பு வாக்களிக்க வர மாட்டாரா? காரணம் என்ன? - Tamil Nadu Lok Sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 2:16 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிக்க நடிகர் சிம்பு வரமாட்டார் என நம்பிகைக்குறிய வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.

சென்னை: நடிகர் சிம்பு இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிக்க வரமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள வாக்குச் சாவடிகளில் பிரபலங்கள் பலர் தங்கள் வாக்குகளை காலை முதலே செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு வாக்களிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர், வர வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கைக்குறிய வட்டாரங்கள் அளித்த தகவலின் பேரில் நடிகர் சிம்பு படப்படிப்பு பணிக்காக வெளியூர் சென்றிருப்பதாகவும், இதன் காரணத்தால் அவர் வாக்களிக்க வரமாட்டார் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: வாக்களருக்கு பரிவட்ட வரவேற்பு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.