ETV Bharat / state

ஹாக்கியில் மாநில அளவில் 4ஆம் இடம்.. 10ஆம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்து அசத்தல்! - Tenkasi 10th student high score

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 7:37 PM IST

10th Result: தென்காசி மாவட்டத்தில் ஹாக்கி போட்டியில் முதல் இடம் பிடித்த மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.

அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் புகைப்படம்
அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் புகைப்படம் (Credit: ETV Bharat Tamil Nadu)

மாணவி சுபாஷினியின் பேட்டி (Credit: ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 625 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26 முதல் ஏப் 8ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே 10) வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் தனியார் பள்ளியில் படித்த சுபாஷினி என்ற மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியிலேயே அதிக மதிப்பெண் எடுத்தார். இவர் ஆங்கிலத்திலும், அறிவியல் பாடத்திலும் முழு மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். முன்னதாக, ஹாக்கி போட்டியில் சுபாஷினி மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் நான்காம் இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாணவி சுபாஷினி கூறுகையில், "விவசாயம் செய்து வரும் எனது பெற்றோர் கடினமான சூழ்நிலைகளிலும் கூட என்னை படிக்க வைத்தனர். அவர்களுக்காக நான் மேலும் சாதிக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் மைதானத்தில் விளையாடுவேன்.

விளையாட்டின் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். அந்த வலியிலும் தொடர்ந்து படித்த காரணத்தால் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்ணை என்னால் பெற முடிந்தது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நற்பணி இயக்கத்தைப் பலப்படுத்தும் நடிகர் சூர்யா.. அரசியலுக்கு அடித்தளமா? - Actor Suriya In Politics

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.