ETV Bharat / state

சென்னையில் 21 நாட்களில் 109 பேர் மீது குண்டாஸ்.. காவல் ஆணையர் அதிரடி! - CHENNAI CRIME

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 9:17 PM IST

CHENNAI CRIME
CHENNAI CRIME

CHENNAI CRIME: சென்னையில் கடந்த 21 நாட்களில் 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை: சென்னையில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் நடப்பாண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 186 குற்றவாளிகள்.

திருட்டு, பணமோசடி,வழிபறி,செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபட்ட 64 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 101 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 17 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 3 குற்றவாளிகள்.

பாலியல் தொழில் நடத்திய 9 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 387 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரையிலான 21 நாட்களில் 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆனையர் சந்தீப் ராய்ரத்தோர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் சட்டவிரோத வாகன நிறுத்தத்தை தடுக்க 3 மாதங்களில் வரைவு கொள்கை: தமிழக அரசு நிதிமன்றத்தில் விளக்கம் - Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.