ETV Bharat / sports

ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 சிக்சர்கள் விளாசி விராட் கோலி சாதனை! - IPL 2024 Virat Kohli 250 sixes

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 7:36 PM IST

Etv Bharat
Etv Bharat

ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 சிக்சர்கள் விளாசி விராட் கோலி சாதனை படைத்து உள்ளார்.

கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்.21) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களுரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களும், விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் 48 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து பெங்களுரூ அணி 223 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இரண்டாவது ஓவரில் விராட் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலியின் சிக்சர் எண்ணிக்கை 250ஐ கடந்தது. 35 வயதான விராட் கோலி 245 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டி உள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பையும் விராட் கோலி பெற்றார்.

இந்த சாதனைப் பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் இதுவரை 357 சிக்சர்கள் விளாசியுள்ளார். அவரைத் தொடர்ந்து மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா 275 சிக்சர்களும், மற்றொரு பெங்களூரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களும் விளாசி உள்ளனர்.

விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 8 சதங்கள் விளாசி உள்ளார். அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக 7 ஆயிரத்து 500 ரன்களுக்கும் மேல் குவித்த வீரர் என்ற சிறப்பையும் விராட் கோலி தன் வசம் வைத்து உள்ளார். அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டும் விராட் கோலி 8 ஆயிரத்து 3 ரன்கள் சேர்த்து உள்ளார்.

இதையும் படிங்க : டாஸ் வென்று பஞ்சாப் பேட்டிங் தேர்வு! குஜராத்தின் அதிரடி ஆட்டம் தொடருமா? - IPL 2024 PBKS VsGT Match Highlights

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.