ETV Bharat / sports

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை! - Virat Kohli made history in T20

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 9:45 AM IST

Updated : Mar 23, 2024, 10:30 AM IST

Virat Kohli
Virat Kohli

Virat Kohli: ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சென்னை: 17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஓப்பனிங்கில் களமிறங்கிய விராட் கோலி 6 ரன்கள் எடுத்தபோது, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

இதன்மூலம், டி20 கிரிகெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார், விராட் கோலி. அதேபோல், நேற்றைய போட்டியில் 21 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற மற்றொரு மைல் கல்லையும் கோலி எட்டியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான விராட் கோலி பல்வேறு சமயங்களில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்து வரும் கோலி, தற்போது 12 ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்கு விலகியதாக பிசிசிஐ (BCCI) தரப்பில் தெரிவிக்கபட்டது. இந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய விராட் கோலி இந்த மைல் கல்லையும் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:

வ.எண்வீரர்கள் பெயர் குவித்த ரன்கள்
1.கிறிஸ் கெயில் 14,562 ரன்கள்
2.சோயப் மாலிக்13,360 ரன்கள்
3.கீரன் பொல்லார்ட்12,900 ரன்கள்
4.அலெக்ஸ் ஹேல்ஸ் 12,319 ரன்கள்
5.டேவிட் வார்னர்12,065 ரன்கள்

இந்த வரிசையில் 12,015 ரன்களுடன் விராட் கோலி 6வது இடத்தில் உள்ளார். அதேபோல், இந்தியாவின் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 11,156 ரன்களுடன் 8வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 16 ஆண்டுகளாக தொடரும் சோதனை..ஆர்சிபியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி! - CSK VS RCB IPL MATCH 2024

Last Updated :Mar 23, 2024, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.