ETV Bharat / sports

இந்திய கேப்டனாக அதிக சிக்சர்கள்.. தோனியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 6:25 PM IST

Etv Bharat
Etv Bharat

Rohit Sharma: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 3 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்திய கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ராஜ்கோட்: ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.15) தொடங்கி நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். ஆனால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் சற்று தடுமாறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில், மார்க் வுட் பந்து வீச்சிலும், ராஜட் பட்டிதார், டாம் ஹார்ட்லி பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - ரவீந்திர ஜடேஜா கை கோர்த்து இந்திய அணியின் ரன்களை உயர்த்தினர். இந்த கூட்டணி 204 ரன்கள் சேர்க்க, சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 14 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்களுடன் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் அடித்த 3 சிக்சர்களுடன் சேர்த்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக 212 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறையடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி 211 சிக்சர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில், ரோகித் சர்மா 212 சிக்சர்கள் அடித்து தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அதேபோல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும், அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் எம்.எஸ். தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்

  • இயான் மோர்கன் - 233 சிக்சர்கள்
  • ரோகித் சர்மா - 212 சிக்சர்கள்
  • எம்.எஸ். தோனி - 211 சிக்சர்கள்
  • ரிக்கி பாண்டிங் - 171 சிக்சர்கள்
  • பிரண்டன் மெக்கல்லம் - 170 சிக்சர்கள்

டெஸ்ட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள்

  • விரேந்தர் சேவாக் - 91 சிக்சர்கள் (180 இன்னிங்ஸ்)
  • ரோகித் சர்மா - 79 சிக்சர்கள் (97 இன்னிங்ஸ்)
  • எம்.எஸ். தோனி - 78 சிக்சர்கள் (90 இன்னிங்ஸ்)
  • சச்சின் டெண்டுல்கர் - 69 சிக்சர்கள் (329 இன்னிங்ஸ்)
  • கபில் தேவ் - 61 சிக்சர்கள் (184 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.