ETV Bharat / sports

டாஸ் வென்று பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு! எழுச்சி பெறுமா மும்பை? - IPL2024 PBKS vs MI Match Highlights

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 7:26 PM IST

Etv Bharat
Etv Bharat

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியனஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

சண்டிகர் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.18) இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 33வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை அணியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 250 ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் :

பஞ்சாப் கிங்ஸ் : ரிலீ ரோசோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

மும்பை இந்தியன்ஸ் : ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.