ETV Bharat / sports

பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு! அதிரடி ஆட்டம் தொடருமா? - IPL2024 RCB vs KKR Match Highlights

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 5:50 PM IST

Etv Bharat
Etv Bharat

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேல்ஞசர்ஸ் பெங்களூரு அணிக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்து உள்ளது.

கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்.21) மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய பிலிப் சாலட் 14 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசினார்.

அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிலிப் சால்ட் 48 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் எப்போதும் அதிரடி காட்டும் சுனில் நரேன் இந்த முறை 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அங்கிருஷ் ரகுவன்ஷியும் 3 ரன்களில் ஸ்லிப்பில் கேட்சாகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 16 ரன்கள் மட்டும் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிங்கு சிங் (24 ரன்) நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். 7 பவுண்டரி 1 சிக்சர் விளாசி 50 ரன்களை கடந்த ஸ்ரேயாஸ் ஐயர், அரை சதம் விளாசிய கையோடு ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர் அந்திரே ரஸ்செல், ரமந்தீப் சிங் ஆகியோர் சற்று அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 222 ரன்களை குவித்தது. அந்திரே ரஸ்செல் 27 ரன்களும், ரமந்தீப் சிங் 24 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

பெங்களூரு அணியில் யாஷ் தயால், கேகரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறிக் கொண்டு இருந்த போது களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூரு அணியிடம் இருந்த ஆட்டத்தை மெல்ல தன் பக்கம் திருப்பினார்.

பெங்களூரு பந்துவீச்சாளர்களின் சொதப்பல் பந்துவீச்சும் கூட கொல்கத்தா அணி 222 ரன்களை எட்ட உதவியது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : ஆசியன் ஓசியன் ஒலிம்பிக் தகுதிச் சுற்று படகு போட்டி: இந்திய வீரர் பல்ராஜ் பவர் வெண்கலம்! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி! - Balraj Pawar Paris Olympics Qualify

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.