ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வெல்லும்.. ஜெய் ஷா உறுதி!

author img

By PTI

Published : Feb 15, 2024, 11:18 AM IST

டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வெல்லும்
டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வெல்லும்

Jay Shah: வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கோப்பை வெல்லும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

குஜராத்: ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பேசிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, “இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டின் ஒப்பந்தம், கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.

ஆனால், டிராவிட் மற்றும் அவருடன் பணிபுரியும் துணை பயிற்சியாளர்களிடம், கடந்த தென் ஆப்பிரிக்கா தொடர் வரை பயிற்சியாளராக நீடிக்கும்படி கூறப்பட்டது. இந்நிலையில், ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பை வரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பது குறித்து, அவரிடம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பின்னர் தென் ஆப்பிரிக்கா தொடர், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து தொடர் என டிராவிட் அடுத்தடுத்து பிஸியானதால், அவருடன் இது குறித்துப் பேச நேரம் கிடைக்கவில்லை. எனினும், ராகுல் டிராவிட் வரும் ஜூனில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார்.

கடந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நாம் இழந்தோம். மேலும், வரும் ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றும்” எனக் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கப் போவது யார் என சஸ்பென்ஸ் நீடித்து வந்த நிலையில், ஜெய் ஷா தற்போது ரோகித் சர்மா என உறுதி செய்துள்ளார். ரோகித் சர்மா கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.