ETV Bharat / sports

ஐபிஎல் 2024: சாம்சன், பட்லர் அதிரடி.. வெற்றியை நோக்கி ராஜஸ்தான் அணி! - bangaluru vs rajasthan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 10:35 PM IST

ஐபிஎல் 2024
ஐபிஎல் 2024

RR VS RCB: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 19வது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பேட்டிங் செய்தனர். இந்த கூட்டணி சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது.

ராதஸ்தான் அணி இந்த கூட்டணியை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. பந்தை நாலாபுறமும் சிதறடித்தனர். ஒரு கட்டத்தில் 44 ரன்கள் எடுத்த ஃபாஃப் அடிக்க முயன்று ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த மேக்ஸ்வெல் 1, சவுரவ் சவுகான் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆனால் தொடக்க வீரரான விராட் கோலி களத்தில் இறுதி வரை நின்று ரன்களை சேர்த்தார். நிதானமும், அதிரடியும் கலந்த ஆட்டத்தால் அவர் தனது 8வது ஐபிஎல் சதத்தை விளாசினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முவிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. விராட் 113 ரன்களுடனும், கிரீன் 5 ரன்களுடனும் அட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது. ஜெய்ஸ்வால் டக் ஆக, அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் விளையாடி வருகின்றனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், அந்த அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 60 ரன்கள் தேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: MI Vs DC: மும்பை அணியில் மீண்டும் சூர்யகுமார் யாதவ்! முதல் வெற்றி பெறுமா? - Suryakumar Back MI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.