ETV Bharat / sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா!

author img

By PTI

Published : Mar 3, 2024, 12:25 PM IST

Etv Bharat
Etv Bharat

World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்தது.

துபாய் : நடப்பாண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டு உள்ளது. அதில், நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதேநேரம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

இதனால் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி சறுக்கலை கண்டு உள்ளது. இந்திய அணி 5 வெற்றி, இரண்டு தோல்வி, 1 டிரா என 8 ஆட்டங்களில் விளையாடி 62 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம் நியூசிலாந்து அணி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆஸ்திரேலிய அணி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு டிராவுடன் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023 ஆண்டு உலக சாம்பியான நியூசிலாந்து அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமானால் வரும் மார்ச் 8 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கட்டாயம் விழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேநேரம், நூலிழை இடைவெளியில் 3வது இடத்தில் இருந்க்கும் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடிக்க வேண்டுமானால், மார்ச் 7ஆம் தேதி தொடங்கும் ஆட்டத்தில் இந்தியாவை, இங்கிலாந்து அணி வீழ்த்த வேண்டும். அதேபோல் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவின் கனவு கைகூடும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. 2021ஆம் ஆண்டு நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்தும், 2023ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது தொடரில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு முறையும் இந்திய அணி இறுதி போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் தற்போது 9 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் போட்டிகளில் பெறும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரசியலுக்கு திடீர் முழுக்கு போட்ட கவுதம் கம்பீர்? திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.