ETV Bharat / sports

தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்… காரணம் என்ன?

author img

By ANI

Published : Feb 17, 2024, 12:37 PM IST

Updated : Feb 17, 2024, 2:22 PM IST

தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்
தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்

black armbands in 3rd Test: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தட்டஜ்ஜிராவ் கெய்க்வாட் (95) உயிரிழந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவர் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ராஜ்கோட் (குஜராத்): இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், முன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்நிலையில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கி விளையாடி வருகிறது. நேற்று இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் சாக் க்ராவ்லியை அவுட்டாக்கிய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார்.

இதனையடுத்து, அஷ்வின் இன்று தனது சொந்த காரணங்களால் 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து திடீரென்று விலகினார். பென் டக்கெட் அபாரமாக விளையாடி 153 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தட்டஜ்ஜிராவ் கெய்க்வாட் கடந்த செவ்வாய் அன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

முன்னாள் டெஸ்ட் கேப்டனான கெய்க்வாட் உயிரிழந்தபோது, இந்தியாவின் மிகவும் வயது முதிர்ந்த டெஸ்ட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தட்டஜ்ஜிராவ் கெய்க்வாட், 1959-இல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார்.

மேலும், அவர் 1957-58 ரஞ்சி சீசனில் கேப்டனாக இருந்தபோது, பரோடா அணி கோப்பை வென்றது. இந்நிலையில், உயிரிழந்த தட்டஜ்ஜிராவ் கெய்க்வாட்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவர் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "500 விக்கெட்கள் சாதனையை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்"- அஷ்வின் உருக்கம்!

Last Updated :Feb 17, 2024, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.