ETV Bharat / spiritual

கனவில் சந்திக்கும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 7:23 AM IST

Today Rasipalan
இன்றைய ராசிபலன்

Today Rasipalan: ஜனவரி 30ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

மேஷம்: சந்தோஷமான செய்தியின் மூலம் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த செய்தி தனிப்பட்ட வகையில் இருக்கலாம் அல்லது உங்கள் தொழில், பணி தொடர்பான செய்தியாகக் கூட இருக்கலாம் அல்லது நிதி ஆதாயமாக இருக்கலாம். உங்கள் பெயர் திறனுக்கு ஏற்ற வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்: சிறந்த முறையில் ஈடுபாட்டுடன், திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதனால், பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சிறந்த வகையில் கலை கையாளும் திறன் உங்களிடம் உள்ளது. இன்று சிறந்த வகையில், நிபுணத்துவத்துடன் செயல்பட்டு, உங்களுக்கு இட்ட பணிகளை நிறைவேற்ற, அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

கடகம்: கடினமாக உழைத்த பணத்தை செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். தேவையில்லாத நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும், நெருக்கமானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும் அவ்வாறு செயல்படுவது நல்லது. பணியிடத்தில் வேலை பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சிம்மம்: உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படும் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டாம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதும், பொறுமையாக செயல்படுவதும் நல்லது. முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லாமல் போகலாம்.

கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம், சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும்.

துலாம்: இன்று ஆதாயமான நாளாக இருக்காது. குறிப்பாக நேர்காணலில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. நம்பிக்கையை கைவிட வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டும். நமது உழைப்பிற்கு வருங்காலத்தில், ஏற்ற பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய, எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு: வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கவனமாக கேட்பீர்கள். உங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான சாதகமான நாளாக இருக்கும்.

மகரம்: திருமணம் ஆகாதவர்கள் என்றால், கனவில் சந்திக்கும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையை சந்தித்ததில், மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் காதல் துணையும் உங்கள் மீது, நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள்.

கும்பம்: குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் சக பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்க அதற்கான காரணங்களாக உங்களை தெரிவிப்பார்கள். அதனால் உங்களது பொறுப்புகளை நீங்களே முடிப்பது நல்லது. மனதிற்குப் பிடித்தவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும். அந்த ஆதரவை கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.