ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: நெருக்கமானவருடன் இரவு விருந்திற்கு செல்லும் வாய்ப்புண்டு.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்! - Today Rasipalan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 7:02 AM IST

Today Rasipalan
இன்றைய ராசிபலன்

Today Rasipalan in Tamil: 2024 ஏப்ரல் 22ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மையை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு திருப்தியான மனநிலை உண்டாகும். நீங்கள் கொடுக்கும் விஷயங்கள், பல மடங்காக உங்களிடம் திரும்ப வரும். நீங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க முடிவு செய்துள்ளதால், மற்றவர்களின் மதிப்பை பெறுவீர்கள்.

ரிஷபம்: யாரும் வெற்றி கொள்ள முடியாத அளவில் திறன் பெற்றவராக இருப்பீர்கள். எனவே, உங்கள் ஆற்றலை வீணடிக்காமல் கவனமாக செயல்படவும். வேலை செய்யும் இடத்தில் சில பணித்திட்டம் தொடர்பாக மன அழுத்தம் உண்டாகலாம். மாலை நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன், அமைதியான முறையில் நேரத்தைக் கழிப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பீர்கள். இன்றும் அதுபோலவே, உங்கள் குடும்பத்தினருக்கு வசதிகள் செய்து கொடுப்பதை பற்றி யோசித்துக் கொண்டிருப்பீர்கள். பணியிடத்தில், முன்முயற்சிகளை மேற்கொள்ளும் உங்கள் திறமையின் காரணமாக, ஆதாயம் கிடைக்கும். நெருக்கமான ஒருவருடன் இரவு விருந்திற்கு செல்லும் வாய்ப்பு உண்டு.

கடகம்: உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளீர்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவீர்கள். நிறுவனத்தில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். பணியில் மூத்தவர்களுடன் சர்ச்சையில் ஈடுபடும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும், வேலையில் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். மாலையில் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம், பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது வர்த்தகம், பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக நேரத்தை திட்டமிட்டு செலவழிக்க வேண்டும்.

சிம்மம்: இன்று தொடக்கம் மனக் கசப்புடன் இருக்கலாம். அதன் காரணமாக விரும்பிய பலன் கிடைக்காமல் போகலாம். பணி தொடர்பான முயற்சிகளுக்கு, நாளின் பிற்பகுதி சாதகமாக இருக்கக் கூடும். பணியில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி: உங்களது மேலதிகாரிகள் மற்றும் பணியில் மூத்தவர்கள், உங்கள் முயற்சியை கவனிக்கும் வகையில் கடினமாக உழைப்பது நல்லது. ஆனால், அதற்கு ஏற்ற அங்கீகாரம், உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். நாளின் முடிவில், நீங்கள் சிறந்த வகையில் பணியாற்றி உள்ளீர்கள் என்பது குறித்து திருப்தியாக உணர்வீர்கள்.

துலாம்: புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும். வர்த்தகத்தில் இன்று மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் காரணமாக, சில பாதிப்புகள் உண்டாகலாம். ஆனால், உங்கள் செயல்திறன் காரணமாக, உங்கள் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் நீங்கும். நீங்கள் பணியில் அதிக நேரம் செலவிடுவதன் காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் தங்களை அலட்சியப் படுத்துவது போல் உணர்ந்து கோபம் கொள்ளலாம்.

விருச்சிகம்: உங்களுக்கு இருக்கும் தொலைநோக்கு சிந்தனை காரணமாக, நிதி பாதுகாப்பு குறித்த அவசியத்தை உணர்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்வீர்கள். சமூக ரீதியான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களை அறிவார்ந்த மனிதராக நினைக்கும் மக்கள், உங்களிடம் உள்ள உயர்ந்த தன்மைகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

தனுசு: இன்று ஒரு சவாலை எதிர் கொள்வீர்கள். உங்கள் மதிப்பை தக்கவைத்துக் கொள்ள, அதை வெற்றி கொள்வது அவசியமானதாக இருக்கும். எனவே, அந்த சவாலை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்வீர்கள். மாலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கவும்.

மகரம்: நம்மில் பெரும்பாலானோருக்கு, எவரேனும் ஒருவரை பின்பற்றி ஊக்கம் பெறும் தன்மை இருக்கும். அப்படி, நீங்கள் மதிக்கும் ஒருவரை சந்தித்து, அவரின் செயல் திறனைப் பார்த்து ஊக்கம் பெறுவீர்கள். இன்று பிற்பகுதியில், எவரேனும் ஒருவருடன் சர்ச்சையில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. இதற்கு சட்ட ரீதியான பிரச்னைகள் வரும் என்பதால், அதனை தவிர்க்கவும். மேலும், இது உங்கள் தொழில் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

கும்பம்: இன்று ஒரு அமைதித் தூதராக செயல்படுவீர்கள். உங்களுடைய பிரச்னைகளையும், மற்றவர்களது பிரச்னைகளையும் மிகவும் சாதுரியமாகவும், சுமுகமாகவும் தீர்த்து வைப்பீர்கள். உங்களுக்கு வரும் வெற்றி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால், இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். உங்கள் காதல் துணையுடன் மாலையில் குதூகலமான முறையில் நேரத்தைக் கழிப்பீர்கள்.

மீனம்: உங்கள் பணியை நிறைவு செய்ய, தனிப்பட்ட முறையை கடைபிடிப்பீர்கள். பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களது கடும் உழைப்புக்கான பலன் கிடைக்காவிட்டாலும், அதற்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குவீர்கள். இந்த புகழ்ச்சிகளினால் திருப்தி அடைந்து விடாமல், தொடர்ந்து கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.