ETV Bharat / opinion

மனித சக்தியின் மறுஉருவாக்கமா AI! செயற்கை நுண்ணறிவால் எதிர்வரும் சாதக.. பாதகங்கள்.. என்ன? நிபுணர் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 10:53 PM IST

Etv Bharat
Etv Bharat

AI: மனித இன்றியமையாதலுக்கு மத்தியில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வழிநடத்தும் இரு வேறு முனைகள் குறித்து மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் கவுரி சங்கர் மமிதி விவரிக்கிறார்.

ஐதராபாத்: வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில், செயற்கை நுண்ணறிவை(AI) பற்றிய பேச்சுகள் மற்றும் யூகப் பார்வைகளை கடந்து உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அழுத்தமான தீர்வாக மாறியுள்ளது. மனித பாதிப்பு மற்றும் பிழைகளுக்கு எதிரான செயற்கை நுண்ணறிவின் எல்லையற்ற ஆற்றலின் சுருக்கமாக அறிவியல் யுகம் மாறி உள்ளது.

செயற்கை நுண்ணறிவின் உலகிற்குள் நாம் நுழையும் போது அதன் மிகத் தீவிரமான அபாயங்கள் மற்றும் வெகுமதிகள் வெளிப்படுகின்றன. அதுவே ​​உலகப் பொருளாதார மையம் போன்ற சர்வதேச அமைப்புகளின் கவனத்தையும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளிப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் தலையீட்டால் ஏற்படும் ஆபத்துகள் :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பெருவதன் மூலம் அபாயம் நிறைந்த முன்னேற்றத்தின் முரண்பாட்டை காண முடிகிறது. மேலும், டிஜிட்டல் தகவல் தொடர்புகளில் நம்பிக்கையின்மை அதிகரிக்கும் வகையிலும், யதார்த்தத்திற்கு அப்பாற்றப்பட்ட யூகங்கள் மற்றும் டீப் பேக் உள்ளிட்ட உண்மைக்கு புறம்பான, போலியான உணர்வுகளை கண் முன்னே கொண்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவின் உந்துதல் காரணமாக கிரிப்டோகிராபி மற்றும் சைபர் செக்யூரிட்டி பயன்பாடுகளுடன் இணைந்து, கையாளுதலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் தகவல் ஒருமைப்பாட்டிற்கு முன்னோடியில்லாத சவால்களை முன்வைக்கின்றன.

உலகளாவிய யூகங்கள் மற்றும் மிகை உலகமயமாக்கல்:

உலகப் பொருளாதார மையம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் உயர் உலகமயமாக்கலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பற்றிய விவாதங்கள் குறித்து கூறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை இந்த பொருளாதார மையங்கள் வலியுறுத்துகின்றன.

இது பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியம் மற்றும் விரிவடையும் சமத்துவமின்மையின் ஆபத்து ஆகிய இரண்டையும் எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே புதிய பனிப்போரை உருவாக்குவது மற்றும் செயற்கை நுண்ணறிவின் மீதான ஆதிக்கத்தை நிலை நிறுத்து சர்வதேச நாடுகளிடையே போட்டியை தூண்டிவிட்டு துண்டாட அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் முனையில் செயற்கை நுண்ணறிவு:

செயற்கை நுண்ணறிவின் மூலம் ராணுவ தேவைகளை, குறிப்பாக ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் மெய்நிகர் உண்மையை உருவகப்படுத்தி பாதுகாப்பு யுக்திகளில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இந்த தொழில்நுட்பங்கள் ராணுவத்திற்கு திட்டமிட்ட நன்மைகளை வழங்கினாலும், அதன் பயன்பாட்டு நெறிமுறை கேள்விக்குள்ளாக்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செயற்கை இண்ணறிவு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தலை எழுப்புவதால் சர்வதேச உறவுகளை சிக்கலுக்கு உள்ளாக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதேநேரம் உலக பொருளாதார மையம் உள்ளிட்ட பிற அமைப்புகள் தனிப்பட்ட ஆயுத பயன்பாடுகளால் ஏற்படும் அபாயத்தை குறைக்க ஒழுங்குமுறைப்படுத்துதல், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து உள்ளன.

சீனா, சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டின் புவிசார் அரசியல் இயக்கவியலை ஆராயும் போது, அதன் மீதான ஆதிக்கத்தை அடைவதற்காக நாடுகளுக்கு இடையேயான போட்டியை உருவாக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் வீண் இயக்கங்கள் உலகளாவிய உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் நிலையிலும் சர்வதேச உறவுகளுக்கு மத்தியில் பதற்றத்தை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வருங்கால சந்ததியனருக்கு உள்ள சாதக மற்றும் பாதகங்கள் :

எதிர்கால சந்ததியினருக்கு, செயற்கை நுண்ணறிவு என்பது இணையற்ற வளமாக காணப்படும் நேரத்தில் வலிமையான சவாலை வழங்குவதையும் உற்று நோக்க முடிகிறது. செயற்கை நுண்ணறிவின் மூலம் டிஜிட்டல் தளங்களை கையாளுவது மற்றும் தவறான தகவல் பரவுவதை தடுப்பதை மிகக் கடினமாக மாற்றுவதாக கூறப்படுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவை கையாள இளைஞர்களிடையே டிஜிட்டல் குறித்த அறிவு மற்றும் விமர்சன சிந்தனை திறன் பற்றிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாணவர்களிடையே தனித்துவமான கற்றல் அனுபவங்கள் மற்றும் தகவல்களுக்கான அணுகலை கையாளுவதை செயற்கை நுண்ணறிவின் மூலம் எளிமையாக கற்க உதவும் எனக் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுன் சமநிலை சட்டம் கூறுவது என்ன?:

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய சகாப்தத்தின் உச்சத்தில் நிற்கும்போது, அடுத்த கட்ட பயணத்திற்கான ஒரு சமநிலையான அணுகுமுறை தேவைப்படும் நிலையில் அதற்கு செயற்கை நுண்ணறிவின் அற்புதமிக்க செயல்பாடுகளை தொலைநோக்கு மற்றும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும், சர்வதேச ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவுக்கு என தனி நெறிமுறை மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய கொள்கைகள் வகுப்பதன் மூலம் பாதுகாப்பை சமரசம் செய்யாமல் தொழில்நுட்பத்தில் மனித ஆற்றலை பெருக்கி எதிர்காலத்தை நோக்கி உலக சமூகத்தை வழிநடத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க : பருவ நிலை மாற்றத்தால் வரும் விளைவுகள் என்ன? சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகளின் திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.