ETV Bharat / opinion

பருவ நிலை மாற்றத்தால் வரும் விளைவுகள் என்ன? சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகளின் திட்டம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 10:55 PM IST

Climate change adaptation: பருவநிலை மாற்றத்தை தவிர்க்க சுற்றுச்சூழலில் சாத்தியமான மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சி.பி. ராஜேந்திரன் விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் : 1850- 1900 இடையிலான தொழிபுரட்சி காலக்கட்டத்தில் உலகளாவிய வெப்பமயமாதலின் சராசரி 1 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. கடந்த 2016, 2017, 2019 மற்றும் 2023 காலக்கட்டத்தில் வெப்பமயமாதல் என்பது 1 புள்ளி 5 டிகிரியுன் தாண்டி பதிவாகி வருகிறது. 2024ஆம் ஆண்டில் உலக வெப்பமயமாதல் சராசரி 1 புள்ளி 5 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்கலாம் என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

2050 ஆண்டுக்குள் இந்தியா உள்பட உலக நடுகளில் மனிதர்கள் வாழ்த்தகாத வகையில் வெப்பநிலை மற்றும் செயலற்ற நிலைக்கு தள்ளக் கூடிய குளிரின் அளவு அதிகரிக்கலாம் என பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர். அதிகரித்து வரும் பருவ நிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதல் காரணங்களால் போலார் பன்ப் பிரதேசங்கள் மற்றும் மலைத் தொடர்களான இமாலயம் உள்ளிட்ட இடங்களில் பனிக் கட்டிகள் உருகுதல், அதிக மழைப் பொழிவு மூலம் தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்கள் உயிர் வாழும் பகுதிகளில் பேரிடர்களை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

பருவ மாற்றம் காரணமாக நிலச்சரிவு, காட்டுத் தீ, பெருவெள்ளம், சூறாவளி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் இந்தியா உள்படை உலக நாடுகளை தாக்கி மனித மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துவதை நம் கண் முன்னே காண்கிறோம். அண்மையில் ஐநா வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலக வெப்பமயமாதல் மூலம் நூற்றாண்டுகளில் கண்டிராத வகையில் பனித் தகடுகள் உருகி கடல் மட்டம் உயர்வதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

அறிவியல் ஆராய்ச்சியில் இருந்து வரும் எச்சரிக்கை தெளிவாக உள்ள நிலையில் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளின் வீதத்தைக் குறைக்க சிறந்த முயற்சிகள் இருந்த போதிலும் வானிலை மாற்றங்கள் நிகழும். மேலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வுகள் மூலம் வாயு வெளியேற்றத்தின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைப் கணிக்க முடியும் எனக் கூறப்பட்டு உள்ளது.

கால நிலை மாற்ற சவால்கள் குறித்த கூட்டத்தில் உலகளாவிய வெப்பமயமாதலை தணிப்பது மற்றும் தழுவுவது குறித்த கூறுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின் அடிப்படையில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது மற்றும் வளிமண்ட்ரலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவரிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் தற்போதைய வெப்பமயமாதலின் சராசரியான 1 புள்ளி 5 டிகிரி செல்சியசை தொடர்ந்து நீடிப்பது மற்றும் தணிப்பது குறித்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அதேநேரம் தட்பவெப்பநிலை மாற்றத்தை சிறந்த முறையில் தக்கவைத்துக் கொள்வதே பருவநிலையை எதிர்க்கும் சமுதாயத்தை உருவாக்குவதற்கான முன்னோக்கிய வழி எனக் கருதப்படுகிறது.

பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்ட உலகளாவிய தழுவல் திட்டங்களுக்கான குறிப்பிட்ட இலக்குகள் தகவமைப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும், இதனால் காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க முடியும் எனக் கூறப்பட்டு உள்ளது.

சுற்றுச்சூழல், சமூகம், பொது சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் புவி வெப்பமடைதலின் பாதகமான தாக்கங்களைக் குறைக்க எடுக்கக்கூடிய பரந்த அளவிலான செயல்களை காலநிலை மாற்றத்திற்குத் தழுவல் குறிப்பதாக தெரிவிக்கப்படுக்கிறது. இந்தத் தாக்கங்களைச் சரிசெய்வதற்கு ஒவ்வொரு நாடு, பிராந்தியம் அல்லது சமூகத்துக்கு ஏற்ற நடைமுறை தீர்வுகள் தேவை எனக் கூறப்படுகிறது.

தட்பவெப்பநிலையால் தூண்டப்படும் சவால்களின் தன்மையைப் பொறுத்து தங்களுடைய வாழ்விடங்களின் குறிப்பிட்ட பிராந்தியத் தேவைகளுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குவது போன்ற தீர்வுகளில் இருந்து சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க வழிவகை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப மனிதர்கள் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தலாம் என்றும் சீர்குலைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பது, கடல் மட்ட உயர்வு அல்லது புயல்கள் தீவிரமடைந்து வருவதால் வானிலைக்கு எதிராகவும் பெருவெள்ளம் உள்ளிட்ட இடர்களுக்கு எதிராகவும் செயலபட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலத்தடி நீரை பெருக்குவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த கால்நடை மேலாண்மை, நிலையான விவசாயம் மற்றும் நீரோட வாழ்விடங்களை மீட்டெடுப்பதற்கு புதிய யுக்திகளைக் கையாள வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ஐநா வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, COP21 மற்றும் COP26க்கு இடையில் தழுவல் குறித்த உலகளாவிய இலக்கு முன்மொழியப்பட்டு உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் தழுவல் குறித்த உலகளாவிய இலக்கை நிர்வகிப்பது காலநிலை மாற்றத்தால் எழும் சவால்களை எதிர்கொள்ள தேவையான உலகளாவிய இலக்குகள் விவாதிப்பது குறித்து விளக்குகிறது. அதேபோல் கடந்த ஆண்டு துபாயில் நடந்த COP28 பருவ நிலை மாற்ற யுக்திகள் பற்றிய புரிதலை மேம்படுத்த தேவையான தளத்தை வழங்க முன்மொழியப்பட்டது.

காலநிலை நிதியில் முக்கிய கவனம் செலுத்த உலகளாவிய தெற்கின் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் புதிதாக உருவாக்கப்பட்ட பேரிடர் நிதியின் மூலம் அதிகளவில் நிதி பங்கீட்டை விரும்புகின்றன. இருப்பினும் 700 மில்லியன் டாலர் மட்டுமே நிதியாக ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

COP28 பருவநிலை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 700 மில்லியன் டாலர் தொகையானது தேவையானதை மேற்கொள்ள கூட தேவைப்படும் நிதியை பூர்த்தி செய்யவில்லை என்றும் வரும் ஆண்டுகளில், இந்த நிதி இடைவெளியை சமன் செய்வது சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் வருங்காலங்களில் இதற்கான நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : "2047க்குள் அனைவருக்கும் காப்பீடு"-சாத்தியமா? இந்திய காப்பீடுத் துறையில் சீர்திருத்தம் அவசியமா? நிபுணர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.