ETV Bharat / international

கடனை திருப்பிச் செலுத்துவதில் 2028 வரை விலக்கு! இலங்கை அதிபர் கோருவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 4:16 PM IST

Etv Bharat
Etv Bharat

பொருளாதார நெருக்கடியின் பெற்ற கடன் தொகைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்க கோரி உத்தேசித்து உள்ளதாக இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார்.

கொழும்பு : சர்வதேச நாடுகளிடம் இருந்து வாங்கிய கடன் தொகைகளை திருப்பிச் செலுத்த 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்து உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வரலாறு காணாத அளவில் நிதி நெருக்கடியை சந்தித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கைக்கு பல்வேறு வகையில் பொருளாதார உதவிகளை வழங்கின.

கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததை அடுத்து நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு இலங்கை அரசு தள்ளபப்ட்டது. மேலும், நாட்டில் தலை விரித்தாடிய பொருளாதார சுணக்கத்தால் அத்தியாவசிய பொருட்கள் கடும் விலை உயர்ந்தது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு நிதி உதவிகளை வழங்கின. குறிப்பாக இலங்கைக்கு ஏறத்தாழ 4 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் உதவிகளை இந்தியா வழங்கியது. அதைத் தொடர்ந்து சர்வதேச நாண நிதியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட இலங்கை நிதி பெற்று நாட்டின் பொது நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை அதிபர் ரனில் விகரமசிங்கே, நாட்டின் பில்லியன் கணக்கான டாலர்கள் கடன் மற்றும் பத்திரங்களை மறுசீரமைக்க இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிவித்து உள்ளார்.

வரும் 2027 டிசம்பர் இறுதி வரை நாட்டின் கடன்களை செலுத்துவதில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற உத்தேசித்து உள்ளதாக நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்து உள்ளார். மத்திய வங்கியின் புள்ளி விபரங்களின் படி, 2023 செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 52 புள்ளி 65 பில்லியன் டாலர்களாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தைப் பேணுவதற்கு, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த பொருளாதார மீளாய்வுக்கு முன்னர், இருதரப்பு மற்றும் தனியார் பத்திரதாரர்கள் ஆகிய இருதரப்புக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை உறுதியான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

சீனாவுடனான கொள்கை கடன் ஒப்பந்தம் உறுதியான நிலையி சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பிணை எடுப்பு கடனின் இரண்டாவது தவணையான 337 மில்லியன் டாலர் தொகையை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. இலங்கையில் பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக காணப்படும் சீனா, அந்நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில் 10 சதவீதத்தை கொண்டு உள்ளது.

2022ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு இணங்கி, அரசின் வருவாயை அதிகரிக்க வரி உயர்வு மற்றும் நுகர்வோர் மானியங்களை அதிபர் ரனில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதன் காரணமாக 2022ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை நிலைக்கு முன்னேறி உள்ளது.

இதையும் படிங்க : சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம்! முழு இந்திய எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கும் முய்சு! மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.