ETV Bharat / health

வீட்டிலேயே "ORS" தயாரிக்கலாம்.. எப்படித் தெரியுமா? - How To make ORS At Home

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:28 PM IST

Updated : Apr 9, 2024, 5:14 PM IST

கொளுத்தி எடுக்கும் வெயிலில் வெளியே சென்று வந்தால் உடலில் உள்ள நீர் முழுவதும் வற்றிப்போய் ஊடல் சோர்வு அடைவதுபோல் தோன்றும். அந்த சூழலில் நீங்கள் ஓஆர்எஸ் அருந்தலாம். அதை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது எனப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வெயில் காரணமாக வீட்டில் இருப்பவர்களும் சரி வெளியில் சென்று வருபவர்களும் சரி நீரிழப்பு (Dehydrated) ஏற்படுகிறது. இதை சரிக்கட்டும் நோக்கத்தில் மருத்துவர்கள் நீரேற்றம் மிக்க ஆகாரங்களை உட்கொள்ளத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், சிலருக்கு சட்டென்று நீரிழப்பு ஏற்பட்டு தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. பகல் நேரங்களில் வெளியில் செல்வோருக்கு சுகாதாரத்துறையின் அறிவுரைகள்! - How To Protect Heat Stroke

மேலும், சூடு காரணமாகச் சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த சூழலில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது, ஓஆர்எஸ்(ORS) கலந்த தண்ணீரைப் பருகவே. இந்த ஓஆர்எஸை அனைவரும் கடையில் இருந்து வாங்கி வந்து அதைத் தண்ணீரில் கலந்து பயன்படுத்துவோம்.

ஆனால், அதை வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம். மிகவும் எளிமையான இந்த செய்முறையை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் பெறலாம்.

  • ஓஆர்எஸ் தயாரிப்பதற்கு முன்பு கைகளைக் கிருமி நாசினி கொண்டு அல்லது சோப்பு பயன்படுத்தி சுத்தமாகக் கழுவிக்கொள்ளுங்கள்.
  • பிறகு அதற்காகப் பயன்படுத்தும் பாத்திரத்தைச் சூடான நீர் ஊற்றி சுத்தமாகக் கழுவிக்கொள்ளுங்கள்.
  • அதில், ஒரு லிட்டர் அளவுக்குச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அல்லது கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
  • தொடர்ந்து அதில், 6 டீ ஸ்பூன் சர்க்கரை மற்றும் அதே டீ ஸ்பூனில் அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவற்றை நன்றாகக் கலந்து பிறகு பருகலாம். சர்க்கரை, உப்பு மற்றும் தண்ணீரின் அளவுகள் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல். ஓஆர்எஸ் என்பது உடலில் இருந்து இழக்கப்பட்ட நீரை மீண்டும் உப்பு, சர்க்கரை, சுத்தமான தண்ணீர் உள்ளிட்ட கலவையின் மூலம் மீட்டெடுக்க உதவும்.

அதேபோல, இளநீர், எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்டவற்றை உங்களை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள உதவும். மேலும், நாள் ஒன்று நீங்கள் சராசரி குடித்து வந்த நீரைத் தாண்டு ஒரு மடங்கு அதிகம் தண்ணீர் குடித்தாலே டீஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க: "பழைய சோறு" இப்படி செய்து சாப்பிடா இரட்டிப்பான பலன் கிடைக்குமா? - How To Make Perfect Fermented Rice

Last Updated :Apr 9, 2024, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.