ETV Bharat / health

மூளை பக்கவாதம் இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது.. AIIMS ஆய்வில் பகீர் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 2:47 PM IST

AIIMS Study
மூளை பக்கவாதம்

AIIMS Study: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 21 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகளவில் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்: முதியவர்களிடத்தில் காணப்பட்டு வந்த மூளைப் பக்கவாதம், தற்போதைய காலக்கட்டத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தாக்குகிறது. குறிப்பாக, இளைஞர்களை அதிகளவில் தாக்கி வருகிறது.

இதுகுறிந்து டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் (AIIMS) மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பக்கவாதம் அடைந்து அனுமதிக்கப்பட்ட 100 நோயாளிகளில், 20 வயதுக்குட்பட்டவர்களில் 2 பேரும், 21 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 25 சதவீத நோயாளிகளும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், தெலங்கானாவில் உள்ள நிம்ஸ் (NIMS), காந்தி (Gandhi) மற்றும் உஸ்மானியா (Osmania ) மருத்துவமனைகளுக்கு, மூளை பக்கவாதம் அடைந்து வரும் நோயாளிகளில், 15 சதவீதம் பேர் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை பக்கவாதம்:மூளையில் இரத்த ஓட்டத்தில், தடை ஏற்படும் போது அல்லது மூளையில் உள்ள இரத்த நாளம் உடைந்து ரத்தம் கசியும் போது மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. இரத்த நாளத்தில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதால், இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளை திசுக்களை அடைவதைத் தடுக்கிறது. ஆக்ஸிஜன் இல்லாமல் மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் செல்கள் சேதமடைவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உயர் இரத்த அழுத்தம் மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். ஆண்டிற்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் ஆண்டிற்கு ஒருமுறை கூட ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெளிப்புற அறிகுறிகள் தெரிவதில்லை. இதனால், அவர்கள் எந்த தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சையை எடுப்பதில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு 3 வயதானவர்களில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள்:

  • முகம், கை, வாய், மற்றும் காலில், குறிப்பாக உடலின் ஒரு பக்கத்தில் திடீரென உணர்வின்மை அல்லது பலவீனம் ஏற்படும்.
  • கை, கால்களை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளுக்கு, இரத்த ஓட்டம் தடைபட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்க நேரிடும்.
  • பேச்சு குறைபாடு, பார்வையை இழத்தல் மற்றும் சுயநினைவு இழப்பு ஏற்படுகிறது.

நடவடிக்கை:

  • உடல் பருமனை தவிர்க்க வேண்டும்
  • இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்
  • குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் தூங்கவும்
  • மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்
  • தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்த வேண்டும்
  • ஒரு நாளைக்கு 3 முதல் 4 கிராமிற்கு மேல் உப்பு உட்கொள்வதை தவித்தல். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன? அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.